[ad_1]
பழைய காலத்துக்குப் போக இப்ப உள்ளவங்களுக்கு ரொம்பவே ஆர்வமா இருக்கும். ஆனா எப்போ எப்படிப் போறதுன்னு தான் தெரியாது. கொஞ்சம் வேற மாதிரி யோசித்தால் போயிடலாம். அந்த அனுபவம் கிடைச்சா போதாதா… அந்த வகையில் 1960 காலகட்டத்துக்கு எப்படிப் போறதுன்னு பார்க்கலாமா…
தமிழில் வெளியான முதல் ரோடு பிலிம் மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி. படம் முழுக்க முழுக்க சென்னையிலிருந்து பாண்டிச்சேரி போகும் வழியில் பஸ்சில் நடக்கும் சுவாரசியமான விஷயம் தான் கதை. படத்தில் கதாநாயகனாக ரவிச்சந்திரன் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக கல்பனா வருகிறார்.
கல்யாணம் செய்யாமல் 35 வயதில் தற்கொலை செய்து கொள்கிறார். படத்தில் கொகோ கோலாவைப் பற்றி நாகேஷ் கிண்டல் செய்கிறார். 1960களிலேயே சென்னையில் மெர்சிடஸ் பென்ஸ் பஸ் ஓடியுள்ளதைப் படத்தின் மூலம் காண முடிகிறது.
கள்ளச்சாராயம் குடித்தவரை போலீஸ் கைது செய்கிறது. அப்படின்னா அப்பவே தமிழகத்தில் மதுவிலக்கு நடைமுறையில் உள்ளது என்பது தெரிகிறது. அதே நேரம் ‘பாண்டிச்சேரிக்கு போய்ட்டு வந்தால் தான் தள்ளாடுவாங்க. நீ போறப்பவே தள்ளாடறியே’ என்கிறார் நாகேஷ்.
அப்படிப் பார்த்தால் தமிழக குடிமகன்களுக்கு அப்பவே பாண்டிச்சேரியில் இருந்து சரக்கு வந்து இருக்கிறது என்பது தெளிவாகிறது. ரவிச்சந்திரன், நாகேஷ் காம்பினேஷன் என்றாலே செம மாஸ் ஹிட்டாகி விடுகிறது. அந்த வகையில் இந்தப்படமும் விதிவிலக்கல்ல என்பதை நிரூபித்துள்ளது.
1960ல் ஒரு பேருந்து பயணம் சென்றால் எப்படி இருக்குமோ அந்த அனுபவத்தைப் படம் தந்து விடுகிறது. மார்க் அன்டனி படம் போல டைம் மெஷினைக் கொஞ்சம் சுழற்றி விட்டு 1960க்கு டிராவல் பண்ண வேண்டும் என்றால் இந்த படத்தைத் தாராளமாகப் பார்க்கலாம்.
1966ல் திருமலை மகாலிங்கம் இயக்கத்தில் வெளியானது. உசிலை சோமநாதன் கதையை அருமையாக எழுதியுள்ளார். டி.கே.ராமமூர்த்தி இசை அமைத்துள்ளார்.
இந்தப்படத்தில் ரவிச்சந்திரன், நாகேஷ் உடன் இணைந்து கன்னட நடிகை கல்பனா, மனோரமா, ஏ.கருணாநிதி, பக்கோடா காதர், ஏ.வீரப்பன் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தில் நாகேஷ் பஸ் டிரைவராக வந்து கலகலப்பூட்டுகிறார். படம் முழுக்க வயிறு குலுங்கவைக்கும் நகைச்சுவை காட்சிகள் இருக்கும்.
என்ன எந்தன், எங்கே பயணம், மலர் போன்ற பருவமே, ஹலோ மை ப்ரண்ட் உள்பட பல பாடல்கள் நெஞ்சத்தை நிறைக்கின்றன. படம் முழுக்க முழுக்க காமெடி பட்டையைக் கிளப்புவதால் இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
[ad_2]