[ad_1]
ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரில் அக்கினேனி நாக சைதன்யா ஹீரோவாகவும், கிருத்தி ஷெட்டி ஹீரோயினாகவும் இருமொழிகளில் உருவாகி வரும் படம் கஸ்டடி. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தில் அரவிந்த் சுவாமி வில்லனாக நடிக்க, பிரேமி விஸ்வநாத், சரத்குமார், பிரியாமணி, சம்பத் ராஜ் மற்றும் பலர் இதர வேடங்களில் நடிக்கின்றனர்.
இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இந்த படத்தின் டீசர் டிரைலர் பாடல்கள் ஏற்கனவே அனைவரையும் கவர்ந்த நிலையில் தற்போது படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று ஊடக சந்திப்பில் நாக சைதன்யா கலந்து கொண்டார். அந்த சந்திப்பில் நாக சைதன்யா ஸ்டைலாக காணப்பட்டார். ட்ரெண்டி ஸ்டைலில் தாடி, கருப்பு ஜீன்ஸ் அணிந்த நாகசைந்தன்யாவின் தோற்றம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கஸ்டடி ட்ரெய்லர் மே 5-ம் தேதியும், படம் மே 12-ம் தேதியும் வெளியாகிறது.
[ad_2]