[ad_1]
பா. ரஞ்சித்தின் ஃபேவரைட்டான நடிகை துஷாரா விஜயன் அடுத்து ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா முரட்டு ஜிம் பாடியுடன் நடித்த பாக்ஸிங் படமான சார்பட்டா பரம்பரை படத்தில் ஹீரோயினாக மாரியம்மா எனும் கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.
அதன் பின்னர் மீண்டும் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது படத்தில் ரெனே எனும் போல்டான நவநாகரீக பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது தைரியமான கதாபாத்திரத்திற்கு ஏகப்பட்ட விருதுகளும் பாராட்டுக்களும் குவிந்தன.
இதையும் படிங்க: இத்தனை பேரும் ஓட்டுப்போட்டா சிஎம் ஆகிடுவாரோ?.. தலைவர் ஆனதும் ரசிகர்களை முதன்முறையாக சந்தித்த விஜய்!
கடந்த ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியாகி வெற்றிப் பெற்ற கழுவேர்த்தி மூர்க்கன் படத்தில் ஹீரோயினாக நடித்த துஷாரா விஜயனுக்கு ஜாக்பாட் அடித்தது போல சூப்பர் ஸ்டார் ரஜின்காந்தின் வேட்டையன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ரஜினிகாந்தின் மகளாக நடிக்கிறார் என்றும் முக்கியமான கதாபாத்திரம் என ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. ஞானவேல் இயக்கத்தில் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ரஜினியின் வேட்டையன் படத்தில் நடித்து அத்தனை பெரிய நடிகர்கள் உடனும் நடிக்கும் வாய்ப்பை தட்டித் தூக்கி உள்ளார்.
இதையும் படிங்க: அசிங்கப்படுத்திய இசையமைப்பாளரை பழிவாங்கிய வாலி!.. கவிஞருக்கு இவ்வளவு கோபம் கூடாது!..
இந்நிலையில், ஜிம்மில் கடுமையாக வொர்க்கவுட் செய்யும் வீடியோவை சற்றுமுன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள துஷாரா விஜயன் தனது ஜிம் மாஸ்டர் சந்தீப்பையும் அந்த வீடியோவில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். உடலை ஃபிட்டாக துஷாரா வைத்துக்கொள்ள உதவிகளை செய்து வரும் சந்தீப்பை அந்த வீடியோவில் பார்த்த நெட்டிசன்கள் இவரும் லாஸ்லியா போல மாறிவிட்டாரே என கலாய்த்து வருகின்றனர்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யுங்க..
https://www.instagram.com/reel/C27bUdmyy59/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==
[ad_2]