[ad_1]
பிரபல நடிகர் விஷாலுக்கு எதிராக உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் பார்த்திருக்கும் வேலையை வெளிப்படையாக விஷால் கூறிய நிலையில், இதுவரை வாய் திறக்க முடியாமல் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தால் பல பாதிப்புகளை சந்தித்து வரும் சிறு பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்கள் முதல் பலரும் குமுறி வருகின்றனர்.
எந்த படத்தை எந்த தேதியில் தமிழ் சினிமாவில் திரையிட வேண்டும் என்பதையே ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் முடிவு செய்வதாக மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி தனது புதிய பேட்டியில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மறுபடியும் அந்த வேலையை ஆரம்பிச்ச ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!.. என்னன்னு நீங்களே வந்து வீடியோவை பாருங்க!..
ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ரத்னம் படத்தின் ரிலீசுக்கு வேட்டு வைக்கும் விதமாக தியேட்டர்களில் அதிக அளவு அரண்மனை 4 படத்துக்கு செல்லும் வேலைகளை மறைமுகமாக ரெட் ஜெயன்ட் நிறுவனம் பார்த்து வருவதால் தான் விஷால் தற்போது கோபத்துடன் தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார் என பிஸ்மி தனது புதிய வீடியோவில் பேசியுள்ளார்.
ஆரம்பத்திலிருந்து உதயநிதி ஸ்டாலினுக்கு நண்பராக இருந்து வந்த விஷால் சினிமாவில் பல உதவிகளை செய்துள்ளார். ஆனால் தற்போது, விஷாலுக்கு ஒரு பிரச்சனை தனது ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் மூலமாகவே கண்டும் காணாமலும் உதயநிதி ஸ்டாலின் பார்த்து வருவது மிகப்பெரிய துரோகம் என விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: தம்பி ஒரு விஷயம் சொல்லட்டுமா!.. பர்த்டேவுக்கு செம ட்ரீட் கொடுக்க ரெடியான சியான் விக்ரம்!..
மார்க் ஆண்டனி படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு வெளியாக திட்டமிட்ட நிலையில், ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியிருந்த இறைவன் படத்தை அந்த தேதியில் ரிலீஸ் செய்ய நினைத்த ரெட் ஜெயண்ட் நிறுவனம் விஷால் படத்தை தள்ளி வருமாறு உத்தரவு போட கடுப்பான விஷால் என் படத்தை தள்ளி வர சொல்ல நீ யாரு என கேள்வி எழுப்பி தைரியமாக அதே தேதியில் படத்தை வெளியிட்டு மிகப்பெரிய வெற்றியையும் கண்டார்.
இந்த முறை சுந்தர் சி இயக்கி நடித்துள்ள அரண்மனை 4 படத்தை விஷாலின் ரத்னம் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் செய்யவுள்ள நிலையில், அரண்மனை 4 படத்துக்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கும் விதமான ஏற்பாடுகளை ரெட் ஜெயண்ட் நிறுவனம் செய்து வருவதாக பிஸ்மி குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.
இதையும் படிங்க: அந்த மனைவி வாய்த்தது அவள் செய்த பாவம்… இவளோ நான் செய்த பாக்கியம்! பாலுமகேந்திராவா இப்படி சொன்னாரு!..!
[ad_2]