Home Cinema News விஜய் படத்தை இப்படி அசிங்கப்படுத்திட்டாரே ஆர்ஜே பாலாஜி!.. சிங்கப்பூர் சலூன் தலை தப்புமா?.. – CineReporters

விஜய் படத்தை இப்படி அசிங்கப்படுத்திட்டாரே ஆர்ஜே பாலாஜி!.. சிங்கப்பூர் சலூன் தலை தப்புமா?.. – CineReporters

0
விஜய் படத்தை இப்படி அசிங்கப்படுத்திட்டாரே ஆர்ஜே பாலாஜி!.. சிங்கப்பூர் சலூன் தலை தப்புமா?.. – CineReporters

[ad_1]

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் மீனாக்‌ஷி செளத்ரி தான் ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள சிங்கப்பூர் சலூன் படத்திலும் ஹீரோயின். இந்நிலையில், தொடர்ந்து வித்தியாசமாக படத்துக்கு புரமோஷன் செய்து வரும் ஆர்ஜே பாலாஜி சமீபத்தில் நடத்திய புரமோஷனின் போது விஜய் படத்தை கலாய்த்ததாக அஜித் ரசிகர்கள் அசிங்கப்படுத்தி வருகின்றனர்.

நடிகர் விஜய் ஆர்ஜே பாலாஜியை அழைத்து தனக்கு ஒரு கதை சொல்ல சொன்ன நிலையில், இப்போதைக்கு தன்னிடம் கதையில்லை என்றும் சீக்கிரமே உங்களுக்காக ஒரு கதை ரெடி பண்றேன் என சொல்லியிருந்தார்.

இதையும் படிங்க: என்னை ஆச்சரியப்படுத்திய அஜித்தின் பயணம்! இத மட்டும் பாருங்கய்யா.. சூப்பரா சொன்ன தம்பிராமையா

காமெடியனாக இருந்த போது இஷ்டத்துக்கு வாய் துடுக்காக எப்படி பேசி வந்தாரோ அதே போலத்தான் ஹீரோவான பின்னரும் ஆர்ஜே பாலாஜி பேசி வருகிறார் என்கின்றனர்.

குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படம்னு நான் சொல்லவே இல்லையே என ஆர்ஜே பாலாஜி சொல்ல, அவ்ளோதான் அண்ணா குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என விஜே சித்து சொல்ல, அப்படி சொல்லவே பயமா இருக்குடா, இப்போ எல்லாம் சுமாரா ஓடுற படத்துக்குத் தான் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என போடுறாங்கன்னு ஆர்ஜே பாலாஜி ட்ரோல் செய்ய அண்ணே நீங்க அந்த படத்தை சொல்லலையே என கலாய்த்துள்ளனர்.

இதையும் படிங்க: எல்ஐசி பெயர் சர்ச்சை!.. ஆட்டோ கண்ணாடியை திருப்பிய விக்னேஷ் சிவன்!.. இப்போ என்ன பண்ணுவாங்க!..

இந்த வீடியோவை வாரிசு படத்தில் விஜய் “குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி” என சொல்லும் வசன காட்சியுடன் எடிட் செய்து அஜித் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் ரசிகர்கள் உங்க ஆளு அஜித் நடித்த வலிமை படத்தை தான் சொல்றாரு என சண்டையை ஆரம்பித்து விட்டனர். அப்போ ஆர்ஜே பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் குடும்பத்துடன் பார்க்கக் கூடாதா படமா? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.



[ad_2]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here