[ad_1]
தமிழ் சினிமாவில் விஜய், அஜித் என இருவரும் கோலிவுட்டில் உச்சம் தொட்ட நடிகர்களாக கருதப்படுகிறார்கள். இருவருமே ஒரே நேரத்தில் சினிமாவிற்குள் நுழைந்தவர்கள்.ஒன்றாக ஒரு படத்தில் மட்டுமே நடித்திருக்கிறார்கள். அந்த சமயம் இருவருமே ஒரு வளரும் நடிகர்களின் லிஸ்டில் இருந்ததால் இனி ஒன்றாக நடிக்க வேண்டாம் என்ற முடிவை எடுத்திருக்கிறார்கள்.
அதன் பிறகு போட்டி போட்டு பலமான ரசிகர் பட்டாளங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அஜித் , விஜய் இவர்களுக்கு இடையில் போட்டிகள் இருக்கிறதோ இல்லையோ அவர்களை சார்ந்த ரசிகர்கள் வெட்டுக் குத்துத் தவிர இணையத்தில் சண்டை போட்டு வருகின்றனர்.
இப்படி பெரும் புகழை பெற்றுள்ள அஜித் , விஜயுடன் சேர்ந்து நடிப்பது என்பது கனவிலும் நடக்காத காரியம் என ஏராளமான நடிகைகள் நினைத்துக் கொண்டிருக்கையில் அவர்களுடன் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை வேண்டுமென்றே தவறவிட்டிருக்கிறார் நடிகை சாய்பல்லவி.
சாய்பல்லவியை பொறுத்தவரைக்கும் அவர் நடிக்கும் பெரும்பாலான படங்கள் ஹீரோயின் ஓரியண்ட் படமாகவே தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். அதுமட்டுமில்லாமல் நடிக்கும் படத்தில் தனக்கு வெயிட்டான ரோல் இருக்கிறதா என்று பார்த்து தான் நடிப்பார். ஆனால் விஜய், அஜித் நடிக்கும் படங்கள் எப்படி இருக்கும் என அனைவருக்கும் தெரியும்.
அவர்களுக்குத்தான் முக்கியத்துவம் இருக்கும். விஜயின் வாரிசு படத்திற்காக சாய்பல்லவியை கேட்டிருக்கிறார்கள். கதையில் ரஞ்சிதமே பாடலுக்கு ஆடுவீர்கள், அப்புறம் அவ்வப்பொழுது ரொமான்ஸ் சீனில் இருப்பீர்கள் என்று சொன்னதும் அம்மணி முடியவே முடியாது என்று சொல்லிவிட்டாராம். அதன் பிறகு லியோ படத்திலும் கேட்டார்களாம். அதில் த்ரிஷாவின் ரோல் என்பது அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது இல்லையாம்.
அதனால் அதையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். அதே போல் அஜித்தின் துணிவு மற்றும் வலிமை போன்ற படங்களில் கேட்டார்களாம். அதில் போலீஸ் அதிகாரியாக சாய்பல்லவியை கனவில்கூட நினைச்சு பார்க்க முடியாது. அது தெரிந்தே சாய்பல்லவியே நிராகரித்து விட்டாராம். இப்போது பாதியிலேயே விட்ட மருத்துவ படிப்பை முடித்து விட்டு டாக்டர் தொழிலில் கவனம் செலுத்தலாமா என்ற எண்ணத்தில் இருக்கிறாராம் சாய்பல்லவி.
[ad_2]