[ad_1]
தமிழ் சினிமா உலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் கடந்த சில மாதங்களாகவே யார் நம்பர் ஒன், யார் சூப்பர்ஸ்டார் என்கிற பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கிறது. பல வருடங்களாக சூப்பர்ஸ்டார் என்கிற பட்டத்தை வைத்திருக்கிறார் ரஜினி. ஆனால், தற்போது அந்த இடத்திற்கு விஜய் வந்துவிட்டார் என சில திரையுலகில் சிலர் பேச அது பற்றிக்கொண்டது.
இதைத்தொடர்ந்து ஜெயிலர் படத்தில் ‘இவன் பேர தூக்க நாலு பேரு பட்டத்த பறிக்க நூறு பேரு’ என வரிகள் இடம் பெற்றிருந்தது. மேலும், ஜெயிலர் பட விழாவில் பேசிய ரஜினி காக்கா – பருந்து கதையை சொல்லியும் அதிர வைத்தார். அதாவது அவர் பருந்து எனவும் அவரின் இடத்தை பிடிக்க ஆசைப்படும் நடிகர்கள் எல்லாம் காக்கா எனவும் மறைமுகமாக சொன்னதாக தெரிகிறது.
அதன்பின் இந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது. அடுத்து லியோ பட விழாவில் விஜய் எதாவது குட்டி கதை சொல்வாரா இல்லை இந்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்குக் பதில் சொல்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுஒருபுறம் இருக்க, தமிழக மக்களுக்கு அதிகம் பிடித்த நடிகர் யார் என்கிற தலைப்பில் சென்னை லயோலா கல்லூரி சார்பில் தமிழகமெங்கும் ஒரு கருத்துக்கணிப்பு நடந்தது. அதன்படி 5 நடிகர்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: படப்பிடிப்புக்கு யாராவது லேட்டா வந்தா அஜித் இதைதான் செய்வார்.. நடிகை சொன்ன சீக்ரெட்..
இதில் 4.3 சதவீத வாக்குகளை பெற்று சூர்யா 5வது இடத்தில் இருக்கிறார். மசாலா படங்களில் நடித்தாலும் சூரரைப்போற்று, ஜெய்பீம் ஆகிய படங்கள் மூலம் தன்னை சிறந்த நடிகர் எனவும் அவர் நிரூபித்து இந்த இடத்தை பிடித்துவிட்டார். அதேபோல், கலைஞானி மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் 5.9 சதவீத இடத்தை பெற்று 4வது இடத்தில் இருக்கிறார். இடையில் சில வருடங்கள் நடிக்காமல் இருந்தாலும் விக்ரம் திரைப்படம் மூலம் நானும் களத்தில் இருக்கிறேன் என நிரூபித்துவிட்டார்.
இப்போது எல்லோராலும் நம்பர் ஒன், சூப்பர்ஸ்டார் என்றெல்லாம் புகழப்படும் விஜயோ 9.2 சதவீத இடத்தை பெற்று 3வது இடத்தில்தான் இருக்கிறார். அவருக்கு முன் 15.9 சதவீத இடங்களை பெற்று நடிகர் ரஜினி 2வது இடத்தில் இருக்கிறார். சூப்பர்ஸ்டார் ரேஸிலேயே இல்லாத நடிகர் அஜித் 16 சதவீத இடத்தை பெற்று முதலிடத்தை பிடித்துவிட்டார். இதுதான் எல்லோருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
லயோலா கல்லூரியின் இந்த புள்ளிவிபரத்தை அஜித் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஃபகத் பாசில் நடிப்பை கழுவி ஊற்றிய ரசிகர்கள்… வெறியேத்தி விஸ்வரூபம் எடுத்த ரத்தனவேல்..
[ad_2]