[ad_1]
Vijayakanth: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜய் சமீபத்தில் மரணமடைந்தார். இவரின் மரணம் ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரின் இறுதி அஞ்சலிக்கு லட்சக்கணக்கான மக்கள் சென்றனர். முதல்வர் ஸ்டாலின் இரண்டு முறை அஞ்சலி செலுத்தினார்.
தீவுத்திடலில் அவரின் உடல் வைக்கப்பட்டிருந்தபோது திரையுலகை சேர்ந்த சில நடிகர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். நடிகர் அர்ஜுன், தியாகு, மன்சூர் அலிகான், ரஜினி, கமல், விஜய் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதேநேரம், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன், விஷால், சூர்யா, கார்த்தி, சிம்பு உள்ளிட்ட பல நடிகர்களும் நேரில் வரவில்லை.
விஜயகாந்தின் உடலுக்கு அரசு மரியாதையும் கொடுக்கப்பட்டது. அதன்பின் அவரின் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திலேயே உடல் அடக்கம் செய்யப்பட்டது. அதன்பின் சில நாட்களில் விஷால், கார்த்தி, சூர்யா, சிம்பு போன்ற நடிகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
விஜயகாந்த் மரணமடைவதற்கு சில நாட்களுக்கு முன்பு தேமுதிகவின் செயற்குழு கூட்டம் நடந்தபோது அவரை சேரில் அமரவைத்து பிரேமலதா செய்த செயலுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். ஏனெனில், நிமிர்ந்து அமர முடியாமல் விஜயகாந்த் சரிந்து கீழே விழும் நிலையில் இருந்தார். அதற்கு பிரேமலதா கொடுத்த விளக்கத்தையும் யாரும் ஏற்கவில்லை.
இந்நிலையில், டிவிட்டரில் வெளியான வீடியோ ஒன்று எல்லோரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. தேமுதிக தொடர்பான பொதுக்கூட்டம் ஒன்றில் மேடையில் சிலர் நடனமாட செயற்குழு கூட்டத்தில் விஜயகாந்த் எப்படி அமர்ந்திருந்தாரோ அப்படி ஒருவர் அமரவைத்திருந்தனர்.
இந்த வீடியோவை பார்த்த பலரும் ‘இறந்த பிறகும் விஜயகாந்தை இப்படி விளம்படுத்தணுமா?. அவரை இப்படித்தான் காட்ட வேண்டுமா?’ என அவர்களை திட்டி வருகின்றனர்.
WTF did i see , how to unsee this pic.twitter.com/n0VyPA4ZcU
— Schumy Vanna Kaviyangal (@Schumy_Official) February 5, 2024
[ad_2]