Home Cinema News விக்ரமை தவிர்த்து அஜித்துக்கு குரல் கொடுத்த மற்றொரு பிரபல நடிகர்! அட அது அவர் வாய்ஸா? – CineReporters

விக்ரமை தவிர்த்து அஜித்துக்கு குரல் கொடுத்த மற்றொரு பிரபல நடிகர்! அட அது அவர் வாய்ஸா? – CineReporters

0
விக்ரமை தவிர்த்து அஜித்துக்கு குரல் கொடுத்த மற்றொரு பிரபல நடிகர்! அட அது அவர் வாய்ஸா? – CineReporters

[ad_1]

Actor Ajith: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இன்று உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்களை உள்ளடக்கிய நடிகராக அஜித் வலம் வருகிறார். அவரின் படங்கள் வெளியாகிறதோ இல்லையோ அவரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். தல நீ சும்மா வந்து நின்னாலே போதும் தல என்றும் ரசிகர்கள் கேட்டுக் கொண்டு வருகின்றனர்.

இவரின் ரசிகர் படைபலத்தை பார்த்து தான் பலரும் அதிசயித்து போயிருக்கின்றனர்.இந்த நிலையில் நேற்று வெளியான விடாமுயற்சி படத்தின் ஸ்டண்ட் காட்சி சம்பந்தப்பட்ட வீடியோவும் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அது படப்பிடிப்பில் இருக்கும் போது நடந்த விபத்து. அதனால் அஜித்துக்கு என்ன ஆனதோ என்று ரசிகர்கள் பயந்து போயிருந்தனர்.

இதையும் படிங்க:நான் ஊர் ஊரா போறேனா? என்னை பாத்து இப்படி சொல்லிட்டீங்களே… மனமுடைந்த அஜித்..

இவ்வளவு உச்சத்தில் இருக்கும் அஜித் ஆரம்பகாலத்தில் சில விமர்சனத்திற்கும் ஆளானார். நல்ல நிறம், அழகு என மற்றவர்களை கவரும் தோற்றத்தில் இருக்கும் அஜித்துக்கு ஆரம்பத்தில் தமிழ் சரிவர பேச வராது. அதனால் பல கிண்டல்களுக்கு ஆளானார். அவருக்கு முதலில் வாய்ஸ் கொடுத்தது நடிகர் விக்ரம் தான்.

விக்ரம் அஜித்துக்கும் மட்டுமில்லாமல் பிரபுதேவாவின் பெரும்பாலான படங்களுக்கும் டப்பிங் பேசியிருக்கிறார். ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகத்தான் விக்ரம் தன் சினிமா கெரியரை ஆரம்பித்திருக்கிறார். ஆனால் அஜித்திற்கு வான்மதி படத்தில் டப்பிங் கொடுத்தது நடிகர் சுரேஷ்தானாம்.

இதையும் படிங்க: ஜஸ்டு மிஸ்… இல்லேன்னா இவருதான் ‘ஆக்சன் கிங்’.. ஆறடி நடிகரை அரவணைத்த கேப்டன்..

இதையடுத்துதான் ஆசை படத்தில் இருந்து அஜித் முதன் முதலில் தன் சொந்தக் குரலில் பேசி நடித்தாராம். இதுவரை எல்லா படங்களுக்கும் அஜித் தானாகவே சொந்தக் குரலில் பேசி நடித்து வருகிறார். மேலும் அஜித்துக்கு தமிழ் அந்தளவுக்கு தெரியாதாம். அவரிடம் கதை சொல்ல போகும் இயக்குனர்களிடமும் அஜித் கேட்கும் ஒரே வேண்டுகோள் ‘தயவுசெய்து பவுண்டட் ஸ்கிரிப்டை ஆங்கிலத்திலேயே கொடுங்கள்’ என்பதுதான்.

google news

[ad_2]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here