[ad_1]
Vetrimaran: இயக்குனர் வெற்றிமாறன் தன்னுடைய அடுத்த படமான வாடிவாசல் குறித்து நிலவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு முக்கிய அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார்.
கார்த்தி25 பட விழாவில் அமீர் இல்லாமல் போக அதற்கு அவரிடமே கேள்வி எழுந்தது. அவர் என்னை கூப்பிடவில்லை என ஓபனாக உடைத்தார். இதனால் புகைந்து கொண்டு இருந்த பருத்திவீரன் படத்தின் பஞ்சாயத்து மீண்டும் பொதுவெளியில் உடைந்தது.
இதையும் படிங்க: சென்சார் பிரச்சனையால் தலைப்பு மாற்றப்பட்ட ரஜினி படம்!. அட இது தெரியாம போச்சே!..
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தொடர்ந்து சூர்யா குடும்பத்தின் மீதும் சர்ச்சை நிலவி வருகிறது. ஆனால் அவர்கள் தரப்பில் இருந்து இன்னும் எந்த பதிலும் சொல்லவில்லை. வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் சூர்யாவும், அமீரும் இணைந்து நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த பிரச்னையால் சூர்யா விலகுவதாகவும், அவருக்கு பதில் அந்த கதாபாத்திரத்தில் அஜித் நடிப்பார் என்றும் பேச்சுக்கள் எழுந்தது. இந்நிலையில் வெற்றிமாறன் கலந்துக்கொண்ட ஒரு பேட்டியில் வாடிவாசல் படத்தின் கதாபாத்திர தேர்வில் எந்த மாற்றமும் இல்லை. சூர்யா, அமீர் அதில் நடிப்பார்கள். அவர்களுக்காக எழுதப்பட்ட கதை தான் இது.
இதையும் படிங்க: மகளுக்காக மீண்டும் ரெடியாகும் ரஜினி!.. குட்டிக்கதை ரெடியா சார்?!.. கேப்பு விடாம அடிச்சா எப்படி!..
விடுதலை படத்தின் படப்பிடிப்பு மொத்தமாக முடிவுக்கு வர இருக்கிறது. இன்னும் சில ப்ளாஷ்பேக் சீன் மட்டும் எடுக்க வேண்டும். அதை முடித்த உடனே வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டு விடும். அடுத்த வருடம் பாதியில் இருந்து இப்படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார். முதல் ஷெட்யூல் 15 நாட்கள் மட்டுமே நடக்க இருக்கிறதாம். அது முடிந்து இடைவேளையில் சூர்யா சுதா கொங்கராவின் படத்தில் ஒரே நேரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
[ad_2]