Home Cinema News ரோகினிக்கு வில்லியான விஜயா… முத்து வைத்த ட்விஸ்ட்… ஆனா ரொம்ப சந்தோஷப்படாதீங்கப்பா… – CineReporters

ரோகினிக்கு வில்லியான விஜயா… முத்து வைத்த ட்விஸ்ட்… ஆனா ரொம்ப சந்தோஷப்படாதீங்கப்பா… – CineReporters

0
ரோகினிக்கு வில்லியான விஜயா… முத்து வைத்த ட்விஸ்ட்… ஆனா ரொம்ப சந்தோஷப்படாதீங்கப்பா… – CineReporters

[ad_1]

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ரோகினிக்கு தாலி பிரித்து போடும் பங்க்ஷன் நடந்து முடிகிறது. இன்னொரு பக்கம் முத்துவை குடிக்க வைக்க ரோகினி தயார் செய்திருந்த ஆள் ரொம்பவே முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

மேடைக்கு வந்து ரோகினி பக்கத்தில் நிற்கும் விஜயா உங்க அப்பா எப்ப வராரு என கேட்கிறார். கால் போகலை என ரோகினி மீண்டும் சொல்ல என்ன பாத்தா இளிச்சவாய் மாதிரி தெரியுதா? வரமாட்டாருன்னா வரமாட்டார் என்று சொல்லு என்கிறார். இதனால் ரோகிணி அதிர்ச்சியில் நிற்கிறார்.

இதையும் படிங்க: 200 நாட்கள் ஓடிய கேப்டன் விஜயகாந்த் படங்கள்… ஒரே ஆண்டில் 4 வெற்றிப்படங்கள்!..

மண்டபத்தில் முத்துவை காணாமல் அண்ணாமலை தேடிக்கொண்டு இருக்கிறார். அங்கு வரும் மீனாவும் முத்து இல்லாமல் அதிர்ச்சியாகி விடுகிறார். பின்னர் வெளியில் ரோகினி தயார் செய்திருந்த ஆள் தொடர்ந்து குடித்துக் கொண்டு இருக்கிறார். ஆனால் முத்து கையில் கிளாஸுடன் நிற்பதை பார்த்தவர். என்ன சார் நான் நாலு அஞ்சு போய்ட்டேன்.

நீங்க இன்னும் ஒரே கிளாஸ்ல அப்படியே வச்சுக்கிட்டு இருக்கீங்களே குடிக்காம என்கிறார். இதற்கு முத்து  குடிகாரன் இன்னொரு குடிகாரனை குடிக்க கூப்பிடும் போது வரமாட்டேன் மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்ல முடியாது. அதனாலதான் வந்தேன். ஆனால் என் பொண்டாட்டிக்கு எந்த பிரச்சினையும் பண்ண மாட்டேன்னு சத்தியம் பண்ணி கொடுத்து இருக்கேன் என்கிறார். இதை வெளியில் வரும் மீனா கேட்கிறார்.

மேடையில் இருக்கும்  ரோகினியிடம் வித்யா அவர் குடிக்க கூப்பிட்டு போயாச்சு எப்ப வேணாலும் பிரச்சினை பண்ணுவாரு என தைரியம் கொடுக்கிறார். இதைக் கேட்ட ரோகினி சந்தோஷமாகிவிடுகிறார். அங்கு வரும் விஜயா ரோகினியை உங்க அப்பாவிடம் ஆசீர்வாதம் வாங்கு என்கிறார்.

இதையும் படிங்க: அந்த நடிகரா? செட் ஆகாது.. அஜித் நடிக்க மறுத்து அர்ஜூன் நடிப்பில் வெளியான திரைப்படம்

எங்க அப்பா இன்னும் வரலையா ஆன்ட்டி என கண்ணில் கண்ணீரை வைத்து சமாளிக்க முயற்சி செய்கிறார். அந்த நேரத்தில் அண்ணாமலை வந்து ஏன் அந்த பொண்ணு திட்டிட்டு இருக்க என சமாதானம் செய்யும் முயற்சி செய்கிறார். உடனே ரோகினி இப்போதைக்கு எனக்கு அப்பா அம்மா நீங்கதான் என அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறார்.

பின்னர் ரூமுக்கு செல்லும் ரோகினி இதனால்தான் பங்ஷனுக்கு முன்னாடியே பிரச்சனை ஆரம்பிக்கணும்னு சொன்னேன் இப்ப தான் அது நடக்கும் என வித்யாவிடம் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். இனிமேல் மனோஜ் என் பேச்சை கேட்கிற மாதிரி பண்ணி வைக்கணும் என்கிறார்.  வித்யா அதான் தனி குடித்தனம் போயிடுனு சொல்றேன் என்கிறார்.

அடுத்த வாரம் எபிசோடின் முன்னோட்டமாக ஸ்ருதி கழுத்தில் இருந்த மாலையில் செயின் ஒன்று இருக்க அதை மீனா எடுத்து பத்திரப்படுத்தி வைக்க பார்க்க அங்கு வரும் வாசுதேவன் மற்றும் ஸ்ருதியின் அம்மா அவரை திருடி என்கின்றனர். இதில் பிரச்னையாக முத்து  வாசுதேவனை கையை நீட்டி அடிப்பது விடுகிறார்.

google news

[ad_2]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here