[ad_1]
Kamalhassan: தமிழ் சினிமாவில் மிகப்பெரிய காதல் மன்னன் என்றால் அது கண்டிப்பாக கமல்ஹாசன் தான். அவரின் 80ஸ், 90ஸ் படங்களில் முத்தக்காட்சி இல்லாத படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படி ஒரு ரொமான்ஸ் விரும்பியான கமலின் அடுத்த பட நாயகி குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தியன் படத்தின் ஷூட்டிங் இன்னும் சற்று நாளில் முடிய இருக்கிறது. அப்படத்தினை தொடர்ந்து தமிழில் தக் லைஃப் படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். இப்படத்தினை மணிரத்னம் இயக்க இருக்கிறார். இக்கூட்டணியில் ஏற்கனவே வெளியான நாயகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதையும் படிங்க: அவருக்கு முன்னாடி நான்லாம் சின்ன பையன்!.. சிவாஜியையே பிரமிக்க வைத்த நடிகை…
தற்போது தக் லைஃப்பில் இணைந்து இருப்பது இன்னும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. மேலும், இப்படத்தில் திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் நடிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் இணைய இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
இதை வைத்து பார்க்கும் போது ஐஸ்வர்யா தான் கமலின் ஜோடியாக இருப்பார். துல்கர் அல்லது ரவியின் ஜோடியாகவே திரிஷா நடிக்க இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. பிக்பாஸ் முடிய இருக்கும் நிலையில் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஊருக்கே தெரிந்த விஷயம் உனக்கு தெரியாதா? கருணாநிதியின் ரகசியத்தை மனைவியிடம் போட்டுக்கொடுத்த மனோரமா
இப்படத்தின் டைட்டில் அறிவிப்பே பெரிய லைக்ஸை குவித்தது. வழக்கம் போல மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இப்படத்திற்கும் மியூசிக் போட இருக்கிறார். இப்படத்தினை ரெட் ஜெயன்ட் மூவிஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலுடன் இணைந்து மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. ஏற்கனவே மன்மதன் அன்பு, தூங்காவனம் படத்தில் கமலின் ஜோடியாக திரிஷா நடித்து இருந்தார்.
ஆனால் அதில் இருவருக்கும் பெரிய அளவிலான காட்சிகள் இல்லை. இந்நிலையில் மணிரத்னம் படத்தில் முக்கியத்துவம் இருக்கும் என திரிஷா ஆசையில் மண்ணைப் போடும் விதமாக இந்த அறிவிப்பு கசிந்துள்ளது. இருந்தும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.
[ad_2]