Home Cinema News ராமராஜனுக்கு உள்ள வரவேற்பு இந்தியன் தாத்தாவுக்கு இல்லையா? பிரபலம் சொல்வது என்ன? – CineReporters

ராமராஜனுக்கு உள்ள வரவேற்பு இந்தியன் தாத்தாவுக்கு இல்லையா? பிரபலம் சொல்வது என்ன? – CineReporters

0
ராமராஜனுக்கு உள்ள வரவேற்பு இந்தியன் தாத்தாவுக்கு இல்லையா? பிரபலம் சொல்வது என்ன? – CineReporters

[ad_1]

Ramarajan, Kamal

இந்தியன் படம் வந்து 28 வருஷம் ஆகிவிட்டது. சமீபத்தில் இந்தியன் 2 தாத்தாவோட போஸ்டர் கம்பீரமான லுக்குடன் வெளியானது. இந்தப் போஸ்டருக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லை என்பது தான் சோகம் என்கிறார் வலைப்பேச்சு அந்தனன். இதுகுறித்து மேலும் அவர் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.

இந்தியாவில் லஞ்சம் இல்லாத துறையே இல்லை என்ற அளவில் போய்விட்டது. அந்த வகையில் லஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது. 28 வருடத்திற்கு முன் 100 ரூபாய் வாங்கிய லஞ்சம் இன்று 1 லட்ச ரூபாயாக மாறியிருக்கிறது.

இதையும் படிங்க… கமல் இப்படி ஒரு காரியத்தை செய்வாருனு நினைக்கல! அடிமையா போனதுதான் மிச்சம்.. ஆதங்கத்தில் இயக்குனர்

அன்று இந்தப் படம் வந்த போது ரசிகர்கள் கொண்டாடினார்கள். இன்று அந்த இந்தியன் 2 படத்தில் ஷங்கர் எந்த அளவில் உருவாக்கி இருக்கிறார்? 2கே கிட்ஸ்களுக்கு இது பிடிக்குமா?

கமலுடைய அரசியல் தனி. சினிமா தனி என்ற வகையில் தான் உள்ளது. கமல் தனிக்கட்சியாக இருந்து லஞ்சத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தால் அதில் ஒரு நியாயம் இருக்கு. ஆனால் இன்று அவர் அரசியலில் சேர்ந்துள்ள இடம்னு ஒண்ணு இருக்கு.

திராவிட கட்சிகள் எல்லாமே லஞ்சம், ஊழல் என தலைவிரித்தாடி வருகிறது. திராவிட கட்சிகளை கமல் ஆதரித்ததால் இப்படி ஒரு படம் வெளியிடும்போது ரசிகர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பது தான் இந்த போஸ்டரிலும் நடந்துள்ளது.

Indian 2

Indian 2

முன்னர் அரசுத்துறைகளில் போய் லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால் இன்று எல்லாமே ஆன்லைனில் எடுக்கலாம் எனும்போது லஞ்சம் கொஞ்சம் தடுக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான ராமராஜன் நடித்த சாமானியன் படத்தின் பர்ஸ்ட் லுக் சமூக வலைதளங்களைத் தெறிக்க விட்டது. அந்தளவுக்கு வரவேற்பு இந்தியன் 2 போஸ்டருக்கு இல்லை என்பதே உண்மை. குறிப்பாக 2 கே கிட்ஸ்களின் மத்தியில் வரவேற்பு இல்லை.

இந்தியன் படத்தின் இமாலய வெற்றிக்கு அப்போது கமல் படங்களில் மட்டுமே நடித்து வந்தார். ஆனால் இப்போது அரசியலிலும் ஈடுபட்டுள்ளதால் இந்தப் படத்திற்கு போதிய வரவேற்பு இல்லையோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

[ad_2]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here