[ad_1]
செய்தியாளர் சந்திப்பில் பேசிய மன்சூர் அலினா திரிஷாவை பற்றி பேசிய விவகாரம் சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் கடுப்பான திரிஷா மன்சூர் அலிகானை திட்டி டிவிட் போட்டார். இனிமேல் எப்போதும் மன்சூர் அலிகான் நடிக்கும் படத்தில் நடிக்க மாட்டேன் என தெரிவித்தார்.
ஒருபக்கம், நடிகை என்றால் எப்படி வேண்டுமானாலும் பேசலமா என பல நடிகைகளும் சமூகவலைத்தளங்களில் பொங்கியிருந்தனர். அதோடு, மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரை ஜெயிலில் அடைக்க வேண்டும் என்றெல்லாம் கோபமாக பதிவிட்டனர்.
இதையும் படிங்க: ரத்னகுமார் பேச்ச கேட்டு நாசமா போச்சு! ரஜினி171ல் லோகேஷ் 2.0வைப் பாக்க போறீங்க!..
மன்சூர் அலிகானை எனக்கு பிடிக்கும் என சொன்ன இயக்குனர் லோகேஷ் கனகராஜும் அவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இப்படி நாலா பக்கமும் எதிர்ப்பு வர விளக்கமளித்த மன்சூர் அலிகான் ‘நான் பேசியதை கட் பண்ணி தவறாக வெளியிட்டு விட்டனர். எனக்கு கெட்ட பெயர் வரவேண்டுமென திட்டம் போட்டு வேலை செய்கின்றனர். உங்கள் பருப்பு என்னிடம் வேலைக்கு ஆவாது. நான் தவறு செய்யவில்லை. எனவே, மன்னிப்பு கேட்க மாட்டேன்’ என கூறினார்.
இது திரையுலகை மேலும் கோபப்படுத்தியது. தயாரிப்பாளர் மற்றும் தியேட்டர் சங்கமும் மன்சூர் அலிகானின் பேச்சை கண்டித்து அறிக்கை வெளியிட்டது. ஆனால், இப்போது வரை மன்சூர் அலிகான் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை. அதோடு, ‘திரிஷாவை நேரில் வரவழைத்து நான் என்ன பேசினேன் என்பதை போட்டு காட்டுகிறேன். அவருக்கு புரியும்’ என்று மன்சூர் சொன்னார்.
இதையும் படிங்க: திரிஷாவை மட்டுமில்லை விஜய் முன்னாடியே அந்த நடிகையையும் மன்சூர் அலி கான் தப்பா தான் பேசினாரு!..
இது ஒருபக்கம் போய்க்கொண்டிருக்க ‘ஜெயிலர் பட விழாவில் ரஜினி பேசிய போது ‘தமன்னா நடிக்கிறார் என்றதும் ஜாலியாக இருந்தேன். ஆனால், அவரிடம் பேசக்கூட இயக்குனர் என்னை அனுமதிக்கவில்லை. ஏமாந்து போனேன்’ என ரஜினி பேசியதற்கும், மன்சூர் அலிகான் பேசியதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
ஒரு நடிகை மீது இருக்கும் இச்சைதான் இப்படி இருவரையுமே பேச வைத்துள்ளது. மன்சூர் அலிகான் பேசியது தவறு எனில் ரஜினி பேசியதும் தவறுதான் என சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: என்னை அசிங்கமா பேசிட்டாரு!.. எப்பவும் நடிக்க மாட்டேன்!. மன்சூர் அலிகானை போட்டு பொளந்த திரிஷா!..
[ad_2]