[ad_1]
தமிழ்த்திரை உலகில் 60களில் யதார்த்தமான நடிப்பை நடித்து நவரசத்தையும் வெளிப்படுத்தும் நடிகர் என்றால் அது கண்ணை மூடிக்கொண்டு நாம் சட்டென்று சொல்லிவிடலாம் முத்துராமன் என்று.
இவரது குடும்பத்தில் யாருக்கும் திரைத்துறையில் அனுபவம் இல்லை. நாடக ஆர்வம் தான் இவரை சினிமாவிற்கு அழைத்து வந்தது. எஸ்எஸ்ஆருடன் இணைந்து பல நாடகங்களில் நடித்துள்ளார்.
அண்ணா கதை எழுத, கலைஞர் வசனம் எழுதிய ரங்கோன் ராதா படத்தில் வக்கீலாக நடித்து அறிமுகமானார். இது 1956ல் வெளியானது. அதன்பிறகு எம்ஜிஆருடன் அரசிளங்குமரியில் நடித்து அசத்தினார். நெஞ்சில் ஓர் ஆலயம், போலீஸ்காரன் மகள், சுமைதாங்கி, தெய்வம், சர்வர் சுந்தரம், காதலிக்க நேரமில்லை, பாமா விஜயம், காசே தான் கடவுளடா, எதிர்நீச்சல், ஊட்டி வரை உறவு, மயங்குகிறாள் ஒரு மாது, வாணி ராணி, மூன்று தெய்வங்கள் என பல படங்களில் நடித்து அசத்தினார்.
பலதரப்பட்ட வேடங்களில் நடித்து அத்தினாலும் முத்துராமன் சிவாஜி, எம்ஜிஆரைப் போல பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை. ஜெயலலிதாவுடன் அவர் நடித்த சூரியகாந்தி செம மாஸ். தான் நடிக்கிற ஒவ்வொரு கேரக்டரில் ரொம்பவும் மிதமான இயல்பான நடிப்பை வெளிப்படுத்துவதுதான் இவரது ஸ்டைல்.
கடைசி வரை எந்தக் கெட்ட பெயரும் வாங்காமல் நடிகர்களின் மத்தியில் வாங்காத நடிகர்னா அது முத்துராமன் தான். போக்கிரி ராஜா படத்தில் வில்லனாக நடிக்க முத்துராமனிடம் பஞ்சு அருணாச்சலம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சினிமா, நாடகம்னு நான் தொடர்ந்து நடிச்சி ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருக்கேன். இப்ப வசதி வாய்ப்போடு நான் செட்டில் ஆகி இருக்கேன். இவ்ளோ நாள் நல்ல நல்ல கதாபாத்திரங்கள்ல நடிச்சிட்டு கடைசில வில்லனா நடிச்சி ஹீரோகிட்ட அடி வாங்கணுமேன்னு தான் யோசிக்கிறேன். அதனால இந்த வேடம் எனக்கு வேண்டாம் என மறுத்தாராம்.
நீங்க ஏன் வில்லன்னா அப்படி பார்க்குறீங்க. நெகடிவ்வா இருந்தாலும் இது ஸ்கோப் உள்ள நல்ல கதாபாத்திரம். இது காமெடி கலந்த நல்ல பாத்திரம். இதுல நீங்க நடிச்சா ரொம்ப வெற்றி பெறும். நல்ல பேரு கிடைக்கும்னு பஞ்சு அருணாச்சசலம் சொன்னாராம். அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதையிலும் அவருக்கு ஏற்ப பல மாற்றங்களைச் செய்தாராம் பஞ்சு அருணாச்சலம். அதன்பிறகே முத்துராமன் நடிக்க சம்மதிச்சாராம்.
[ad_2]