Home Cinema News யாரு கண்ணு பட்டுதோ… பிரிந்து விட்டனரா பிருத்விராஜ் ஷூத்தல் ஜோடி? – Madras Telegram

யாரு கண்ணு பட்டுதோ… பிரிந்து விட்டனரா பிருத்விராஜ் ஷூத்தல் ஜோடி? – Madras Telegram

0
யாரு கண்ணு பட்டுதோ… பிரிந்து விட்டனரா பிருத்விராஜ் ஷூத்தல் ஜோடி? – Madras Telegram

[ad_1]

பிரித்திவிராஜ் முதன்முதலில் நான் வாழவைப்பேன் (1979) என்ற படத்தில் பப்லு என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 1980களில் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட மலையாளப் படங்களில் நடித்துவந்தார்.

அதன் பின்னர் கே. பாலச்சந்தர் இயக்கிய வானமே எல்லை படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார். அந்த படம் வெற்றி பெற்றாலும் தொடர்ந்து சினிமாவில் அவருக்கு நல்ல வாய்ப்புகள் வரவில்லை. அதனால் அஜித் நடித்த அவள் வருவாளா போன்ற படங்களில் எதிர்மறை பாத்திரங்களை ஏற்று நடித்தார்.

அதன்பின்னர்  2000களில் நாகா இயக்கிய நகைச்சுவை தொலைக்காட்சித் தொடரான ரமணி விசஸ் ரமணி மற்றும் அமானுசிய திகில் தொடரான மர்ம தேசம் ஆகிய இரண்டிலும் நடித்தார். இந்த இரு தொடர்களும் இவரது வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தின.

இதற்கிடையில் இவர் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சவால் என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கனார். பிரபல நடிகை ராதிகா நடித்த தொலைக்காட்சித் தொடரான அரசி-யில் திருநங்கையாக நடித்தார்.

அது அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு தொலைக்காட்சித் தொடர்களான ராஜ ராஜேஸ்வரி, வாணி ராணி ஆகிய தொடர்களில் நடித்தார்.

இந்நிலையில் இவர்  தன்னுடைய முதல்மனைவியில் திருமணம் செய்துகொண்டு 56 வயதில், மலேசியாவை சேர்ந்த 26 வயது பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக தகவல் பரவ, அதை மறுத்த பிருத்விராஜ் இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகக் கூறினார்.

அதையடுத்து இருவரும் ஜோடியாக பல இடங்களில் சுற்றி வந்தனர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரொமாண்டிக் வீடியோக்களாக பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் சமீப நாட்களாக இருவரும் எந்த வீடியோவையும் பதிவிடவில்லை. மேலும் அவர்கள் ஏற்கனவே பகிர்ந்த வீடியோக்களையும் டெலிட் செய்தனர்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் ஷீத்தலிடம் “நீங்கள் இருவரும் இப்போது பிரிந்து விட்டீர்களா?” என கமெண்ட் செய்ய, அந்த கமெண்ட்டை லைக் செய்துள்ளார் ஷீத்தல். இதன் மூலம் இருவரும் பிரிந்தது உறுதியாகியுள்ளது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

The post யாரு கண்ணு பட்டுதோ… பிரிந்து விட்டனரா பிருத்விராஜ் ஷூத்தல் ஜோடி? appeared first on Madras Telegram.

[ad_2]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here