[ad_1]
சித்தார்த் தயாரித்து நடித்த சித்தா திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மேலும், சமீபத்தில் ஓடிடியில் வெளியான அந்த படத்துக்கு உலகின் பல இடங்களில் இருந்தெல்லாம் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இந்த படத்தை எடுத்த இயக்குநர் அருண் குமாருக்கு அடுத்து சியான் விக்ரம் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: ராஷ்மிகா மந்தனாவை ரா பகலா தூங்க விடாமல் டார்ச்சர் செய்த இயக்குனர்!.. அவர் ஒரு சரியான சைக்கோவாம்!..
சமீபத்தில், சித்தா படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அப்போது இந்த படத்தில் பெண் குழந்தைகளை கடத்திக் கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லும் கொடூர கொலைகாரனாக நடித்த நடிகர் ரமேஷ் தர்ஷன் மேடையில் பேசும் போது திடீரென செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட பல படங்களில் அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட்டாக சுமார் 20 வருஷத்துக்கும் மேல் சினிமாவில் நடித்து வரும் ரமேஷ் தர்ஷனுக்கு இந்த படத்தில் கொடூரமான வில்லன் கதாபாத்திரம் கிடைத்த நிலையில், பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: படமே இன்னும் ரிலீஸ் ஆகல! அதுக்குள்ள இவ்ளோ காஸ்ட்லியான கிஃப்டா? ரஞ்சித்திற்கு ஷாக் கொடுத்த விக்ரம்
சினிமாவில் சின்ன ரோல் கிடைக்கவே கடந்த 20 வருஷமாக ரொம்ப கஷ்டப்பட்டு வந்ததாகவும் ஆனால், சித்தார்த் மற்றும் அருண் குமார் என்னை நம்பி இப்படியொரு ரோல் கொடுத்தது எனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பாக பார்க்கிறேன் என மேடையில் கண் கலங்கி பேசியபடியே திடீரென அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்று காலில் அப்படியே விழுந்தது தொகுப்பாளினி அஞ்சனா ரங்கனை மட்டுமின்றி நடிகர் சித்தார்த் மற்றும் இயக்குநர் அருண்குமாரை மெய் சிலிர்க்கச் செய்து விட்டது.
Siddha villian – he nailed his performance,really hats off 👏🔥 pic.twitter.com/nC6KpBu7b3
— MuTHU Movie updates (@Muthupalani_) December 9, 2023
[ad_2]