[ad_1]
80களில் பலரும் சினிமா கனவோடு சென்னை வந்தது போல மதுரையிலிருந்து வந்தவர்தான் நடிகர் விஜயகாந்த். அவருக்கு எந்த சினிமா பின்னணியும் கிடையாது. அப்பா பள்ளிக்கு அனுப்பியும் விஜயகாந்துக்கு பெரிய ஆர்வம் இல்லை. அப்பா நான்கைந்து ரைஸ் மில்களை வைத்திருந்தார். அதில் ஒன்றை நிர்வகித்து வந்தார் விஜயகாந்த்.
ரைஸ் மில்லை பார்க்கும் நேரம் போக மற்ற நேரங்களில் நண்பர்களுடன் ஜாலியாக மதுரையை சுற்றி வந்தார். அப்போதுதான் எம்.ஜி.ஆர், ரஜினி ஆகியோரின் படங்கள் விஜயகாந்தை ஈர்க்க ‘நாமும் சினிமாவில் நடித்தால் என்ன?’ என்கிற கேள்வி அவருக்குள் எழுந்தது.
இதையும் படிங்க: விஜயகாந்த் போலவே பெரிய மனசு!.. தம்பிக்கு சொகுசு காரை பரிசாக வழங்கிய விஜய பிரபாகரன்.. இத்தனை கோடியா?
நண்பன் இப்ராஹிம் ராவுத்தருடன் சென்னை வந்து தங்கி வாய்ப்பு தேடினார். எத்தனையோ அவமானங்கள், முயற்சிகளுக்கு பின் வாய்ப்பு கிடைத்தது. சில படங்கள் ஓடவில்லை. எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் அவர் நடித்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ படம் நல்ல வசூலை பெற்றது. அப்படித்தான் டேக்ஆப் ஆனார் விஜயகாந்த்.
அப்போதெல்லாம் நடிகைகள் மும்பையிலிருந்து அதிகம் வருவார்கள். எனவே, ஆங்கிலம் மட்டுமே பேசுவார்கள். அவர்களில் பலருக்கும் தமிழ் தெரியாது. ஆனால், விஜயகாந்துக்கு தமிழ் பேசத்தெரியாத நடிகைகளுடன் நடிக்கவே பிடிக்காது. ராமராஜனுடன் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரூபிணி.
இதையும் படிங்க: 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த விஜயகாந்த்!.. ஆனா கேப்டன் செஞ்சதுதான் ஹைலைட்!..
விஜயகாந்துக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் ரூபிணி. விஜயகாந்தை சந்தித்து பேசிய போது ஆங்கிலத்திலேயே ரூபினி பேச ‘இந்தாம்மா எனக்கு இங்கிலீஸ்லாம் தெரியாது. நீ தமிழ் கத்துக்கிட்டு வந்து என்கிட்ட பேசு. அப்பதான் உன்கூட நடிப்பேன்’ என கறாராக சொல்லிவிட்டார். அவர் சொன்னது போலவே ரூபிணியும் தமிழை பேசக்கற்றுக்கொண்டு பின் அவருடன் நடித்தார். அந்த படம்தான் கூலிக்காரன்.
அதன்பின், புலன் விசாரணை, மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், கேப்டன் பிரபாகரன், ஹானஸ்ட் ராஜ் ஆகிய படங்களில் ரூபிணி விஜயகாந்துடன் நடித்தார். தமிழின் மீது ஆர்வம் கொண்டிருந்த விஜயகாந்த் கடைசிவரை தமிழை தவிர மற்ற மொழி படங்களில் நடிக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
[ad_2]