[ad_1]
திரையுலகை பொறுத்தவரை மக்களால் பெரிதும் மதிக்கப்படும் ஒரு சுதந்திர போரட்ட வீரர், ஆன்மீக ஞானிகள், அரசியல் தலைவர்கள் அல்லது சினிமாவில் ஆளுமையாக இருந்த நடிகர்களின் வாழ்க்கை கதையை பயோபிக் என்கிற பெயரில் திரைப்படமாக எடுப்பது என்பது பல வருடங்களாக நடந்து வருகிறது.
தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கும், கன்னடம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் அந்தந்த மாநிலங்களில் பிரபலமானவர்களின் பயோபிக்கை எடுப்பது என்பது இப்போதும் தொடர்ந்து வருகிறது. அந்தந்த மொழிகளில் பெரிய நடிகர்கள் அதுபோன்ற வேடங்களில் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: அவரு ரஜினி வெறியனாச்சே! தலைவர் 170ல் முதல் ஆளாக துண்ட போட்ட நடிகர் – ஆனால் ஒரு கண்டீசன்
தமிழில் ராகவேந்திரராக ரஜினியும், பெரியாராக சத்தியராஜும், எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர். அதேபோல், தெலுங்கில் கிருஷ்ணராகவும், ராமராகவும் என்.டி.ராமாராவ் நடித்து அசத்தியுள்ளார். இதேபோல், கன்னடம் மற்றும் ஹிந்தியிலும் பல படங்கள் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் ஆன்மீக குருவாக பார்க்கப்படுபார் நாராயண குரு. தமிழ்நாட்டில் நாத்திகத்தில் பெரியார் போல கேரளாவில் ஆன்மிக பெரியவர் இவர். இவரின் பயோபிக்கை ஒரு இயக்குனர் எடுக்க முன்வந்தபோது மோகன்லால் மற்றும் மம்முட்டி போன்ற பெரிய நடிகர்களாக அதில் நடிக்க முன்வந்தனர். ஆனால், அவர்களின் முகம் நாராயண குருவின் முகத்திற்கு அவர்கள் பொருந்தவில்லை. அவர் வேடத்தில் நடிக்க எங்களுக்கு பாக்கியம் இல்லை என்றே மம்முடியும், மோகன்லாலும் சொன்னார்களாம்.
அதன்பின் தமிழ் சினிமாவில் நடித்து வந்த தலைவாசல் விஜயின் புகைப்படத்தை பார்த்து அவரை அந்த இயக்குனர் தேர்ந்தெடுத்தாராம். நாராயணகுருவின் கதையை ஒரு மாதம் படித்து, தியானம் ஆகியவற்றை செய்து அந்த கதாபாத்திரத்திற்கு தயாராகி தலைவாசல் விஜய் அந்த படத்தில் நடித்தாராம்.
இதையும் படிங்க: இப்படியா காப்பி அடிப்பாங்க!.. அரசியல் ரூட்டுக்கு அந்த நடிகரை அப்படியே ஃபாலோ பண்ணும் தளபதி!.
[ad_2]