Home Cinema News மனோஜ் மற்றும் ரோகிணியை மிரளவிட்ட விஜயா… அடடே! நல்லா சூடு பிடிக்குதே! – CineReporters

மனோஜ் மற்றும் ரோகிணியை மிரளவிட்ட விஜயா… அடடே! நல்லா சூடு பிடிக்குதே! – CineReporters

0
மனோஜ் மற்றும் ரோகிணியை மிரளவிட்ட விஜயா… அடடே! நல்லா சூடு பிடிக்குதே! – CineReporters

[ad_1]

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மனோஜ் வீட்டுக்கு வந்து விஜயாவிடம் பணத்தினை கேட்டு அடிப்போடுகிறார். முத்து என்னமோ பிளான் பண்ணிட்டான் என்கிறார். நான் கனடா வேலைக்கு போணும். காசு வேணுமா? என விஜயாவிடம் அடிப்போடுகிறார்.

அண்ணாமலை அவ எப்படி கொடுப்பா எனக் கேட்க வீட்டை வச்சு கொடுங்க என்கிறார். அதானே இன்னைக்கு வர அதுல தான் கையை வைக்கலை. இப்போ அதுக்கும் வந்துட்டான் என்கிறார் மனோஜ். ஏற்கனவே 27 லட்சம் இப்போ 14 மொத்தம் 41 லட்சம் என்கிறார்.

இதையும் படிங்க: விஜய் நழுவ விட்ட முக்கிய படங்கள்!.. அந்த கதையில் நடிச்சதால வாழ்க்கையே மாறிய பிரபலங்கள்…

நீ சும்மா இரு. அம்மா நான் எல்லாத்தையும் முடிச்சி கொடுத்துடுவேன் என்கிறார். அப்போ ரோகிணி வர என்ன பேசிட்டு இருக்கீங்க எனக் கேட்க வீட்டை வச்சு கனடா போக காசு கேட்டுக்கிட்டு இருக்கார் என்கிறார் மீனா. இதை கேட்ட மனோஜ் நான் எல்லாம் அவளிடம் சொல்லிட்டேன். அவ தான் ஐடியாவே கொடுத்தா என்கிறார்.

இதனால் விஜயா முறைக்க என்கிட்ட காசு கேட்டாரு ஆண்ட்டி. நான் கொடுக்கிற நிலைமைல இல்ல. அதான் ஒரு ஐடியாவா இதை சொன்னேன் என்கிறார். விஜயா என்ன சொல்ல போகிறார் எனக் காத்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் விஜயா அதெல்லாம் தர முடியாது. இதை உன்கிட்ட கொடுத்துட்டு, நாங்க பிளாட்பார்முக்கு போறதா?

அதெல்லாம் முடியாது. இங்க என்ன வேலை பார்க்க முடியுமோ அதை பாரு என்கிறார். ரோகிணி அவர்தான் கேட்கிறாருல ஆண்ட்டி கொடுக்க வேண்டித்தானே. வேணும்னா நீயே கொடு. அப்பா நிலைமை தெரியும்ல ஆண்ட்டி. அப்போ அவரு வெளியில வந்தோன கொடு என ஷாக் கொடுத்து விடுகிறார்.

இதையும் படிங்க: ஓடியாங்க.. ஓடியாங்க!.. ஊர்வசி நடித்து மிரட்டிய ஜே பேபி!.. எந்த ஓடிடியில் வந்துருக்குன்னு பாருங்க!..

இதை பார்க்கும் முத்து, இது கனவா எனக் கேட்க மீனா கிள்ளிவிடுகிறார். உண்மை தான். அப்பா அம்மா இன்னைக்கு தான் நியாயமா பேசி இருக்காங்க. அண்ணாமலையும் இன்னைக்கு தான் பொறுப்பான அம்மாவா பேசி இருக்க எனக் கூறிவிடுகிறார். மனோஜ் ப்ளீஸ் எனக் கேட்க முடியாது என்கிறார்.

இதையடுத்து, ஸ்ருதி பைக்கில் சென்று கொண்டு இருக்க பிஜூ அவரை மறித்து வம்பு செய்கிறார். சரியாக அங்கு வரும் முத்து சண்டை போட்டு அவரை துரத்தி விடுகிறார். பின்னர் ஸ்ருதியுடன் உனக்கு என் மேல தான் கோவம். என் தம்பியை தண்டிக்காதே. அவன் நீ இல்லாமல் ரெஸ்டாரெண்டில் இருக்கான் எனக் கூறிவிட்டு செல்கிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

[ad_2]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here