[ad_1]
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து முதன்முறையாக ஹலோ மேகஸின் அட்டைப் படத்துக்கு போஸ் கொடுத்துள்ளனர். அதன் புகைப்படங்களை தற்போது நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இருவரும் ஒன்றாக இணைந்து இருக்கும் போட்டோவிலேயே நயன்தாராவின் கழுத்து பகுதி கோணலாக இருப்பதாக பலரும் கிண்டல் அடித்து வரும் நிலையில், நயன்தாரா மாதிரியே தெரியல என்றும் ஏஐ எடிட்டா? என்றும் கிண்டல் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: விஜயகாந்த் போலவே பெரிய மனசு!.. தம்பிக்கு சொகுசு காரை பரிசாக வழங்கிய விஜய பிரபாகரன்.. இத்தனை கோடியா?
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு இந்த மேகஸின் போட்டோஷூட்டின் போது சரியாக மேக்கப் போடவில்லையா? என்கிற கேள்விகளையும் நயன்தாரா ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். ஓவர் மேக்கப் போட்டதால் தான் இப்படி பேய் மாதிரி இருக்காரு நயன்தாரா என்றும் லைட்டா மேக்கப் போட்டிருந்தால் தேவதை மாதிரி இருந்திருப்பார் என கலாய்த்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஷாருக்கானுக்கு ஜோடியாக பாலிவுட்டில் நயன்தாரா ஜவான் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தின் இயக்குநர் அட்லி என்பதால் தான் நயன்தாராவுக்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்றும் தொடர்ந்து அவருக்கு எந்தவொரு பட வாய்ப்பும் இந்தியில் கிடைக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: கில்லி படத்தின் ‘கொக்கர கொக்கரக்கோ’ பாடலுக்கு பின்னால இவ்ளோ பெரிய சோகமா?..
அட்லி தெலுங்கில் அல்லு அர்ஜுனை வைத்து இயக்கப் போகும் படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு இல்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏப்ரல் மாதம் டெஸ்ட் படம் வெளியாகும் என சொல்லியிருந்தனர். ஆனால், அந்த படம் குறித்து எந்தவொரு பேச்சும் காணோமே என்று ரசிகர்கள் நயன்தாரா, மாதவன், சித்தார்த் நடிப்பில் உருவாகி உள்ள டெஸ்ட் படத்தின் அப்டேட் குறித்தும் கமெண்ட் பக்கத்தில் கேட்டு வருகின்றனர்.
நயந்தாரா அடுத்ததாக டெஸ்ட், மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்களை ரிலீஸ் செய்ய காத்திருக்கிறார். விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் எல்ஐசி படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு விடாமுயற்சி படத்துக்கு போட்டியாக வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தூங்குனது போதும் அவதாரம் எடுத்து எழுந்து வாங்க கல்கி!.. பிரபாஸ் படத்தை பங்கம் பண்ணும் ரசிகர்கள்!..
[ad_2]