Home Cinema News பொங்கலுக்கு சம்பவம் காத்திருக்கு… மிரட்டலாய் வெளியான அரண்மனை4 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்… – CineReporters

பொங்கலுக்கு சம்பவம் காத்திருக்கு… மிரட்டலாய் வெளியான அரண்மனை4 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்… – CineReporters

0
பொங்கலுக்கு சம்பவம் காத்திருக்கு… மிரட்டலாய் வெளியான அரண்மனை4 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்… – CineReporters

[ad_1]

தமிழ் சினிமாவில் முறை மாமன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராய் அறிமுகமானவர் சுந்தர்.சி. இவர் இயக்குனர் மட்டுமல்லாமல் சிறந்த நடிகரும் கூட. இவர் இயக்கிய திரைப்படங்களிலேயே இவர் நடிப்பதும் உண்டு. இவர் இயக்கிய திரைப்படங்கள் பல வெற்றி அடைந்துள்ளன.

இவர் சூர்யவம்சம், அன்பே சிவம், கிரி போன்ற பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். மேலும் குரு சிஷ்யன், முத்தின கத்திரிக்காய், அரண்மனை போன்ற பல திரைப்படங்களின் மூலம் தனது நடிப்பினையும் வெளிகாட்டியுள்ளார்.

இதையும் வாசிங்க:லியோவின் ட்ரைலரிலுமா கைய வைப்பீங்க.. கடுப்பில் கதறும் விஜய் ரசிகர்கள்.. அட போங்கப்பா!

2014 ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியான படம்தான் அரண்மனை. இப்படம் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. இப்படத்தை தொடர்ந்து அரண்மனை2, அரண்மனை3 போன்ற படங்களை இயக்கினார். முதல் பாகத்தில் இருந்த அளவுக்கு மற்ற பாகங்களில் கதைகளில் சுவாரஸ்யம் இல்லாமல்தான் இருந்தது.

பின் கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின் இவர் தற்போது அரண்மனை4 திரைப்படத்தை இயக்க உள்ளார். இப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் இப்படத்தில் நடிகை தமன்னா, ராஷி கண்ணா, யோகிபாபு போன்றவர்களும் நடிக்க உள்ளனர். மேலும் இப்படத்தில் ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கவுள்ளார்.

இதையும் வாசிங்க:கல்யாணம் பண்ணிக்கிறேன்னு காரியத்தை முடிச்சிட்டு.. கழட்டி விட்ட நடிகர்!.. டென்ஷனான ராணி நடிகை!..

இப்படத்தில் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை தற்போது இதன் தயாரிப்பு நிறுவனமான அவ்னி சினிமேக்ஸ் வெளியிட்டுள்ளது. மிரட்டலாக களம் இறங்கிய இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இப்படத்தினை வருகின்ற பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

aranmanai 4 first look poster

aranmanai 4 first look poster

google news

[ad_2]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here