[ad_1]
ஹரிஷ் கல்யாண் ஓர் வளர்ந்து வரும் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் நடிகர் ஹரிஷ் கல்யாண் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து அறிந்து அறிந்து, சட்டப்படி குற்றம் ,பொறியாளன், வில் அம்பு போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகர் ஹரிஷ் கல்யாண் . இருந்தாலும் இவர் தமிழ் ரசிகர்களிடையே,
பெரிய அளவில் பிரபலமானது கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் தான் . இந்த திரைப்படம் இவரை பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாக்கியது என்று தான் சொல்ல வேண்டும் . குறிப்பாக இந்தப் படத்தில் இருந்து தான் இவருக்கு ,
பெண் ரசிகைகள் அதிகமாக இருந்து வருகின்றனர் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ,தனுசு ராசி நேயர்களே ,தாராளபிரபு, ஓ மணப்பெண்ணே என்று வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வந்தார் ஹரிஷ் கல்யாண்.
அது மட்டுமல்லாமல் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான பார்க்கிங் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இதனிடையே கடந்த வருடம் நர்மதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் ஹரிஷ் கல்யாண் . இப்படி இருக்கும் நிலையில் ,
பலரும் பார்த்திராத நடிகர் ஹரிஷ் கல்யாணின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…
[ad_2]