[ad_1]
சினிமாவுக்கு வரும் போதே சீக்கிரம் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்கிற திட்டத்துடன் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். கன்னடத்தில் அவர் நடித்து வெளியான முதல் படமான கிரிக் பார்ட்டி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியுடன் நிச்சயதார்த்தமே செய்துக் கொண்டார். ஆனால், திருமணத்துக்கு முன்னதாக ராஷ்மிகாவுக்கும் ரக்ஷித்துக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த உறவு திருமணத்திற்கு செல்லாமல் பாதியிலேயே பிரேக்கப் ஆனது.
அதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கிய ராஷ்மிகா மந்தனா விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த கீத கோவிந்தம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், அந்த படம் வெளியாகும் முன்பே விஜய் தேவரகொண்டாவை ராஷ்மிகா மந்தனா காதலிக்கிறார் என்கிற கிசுகிசுக்கள் கிளம்பின.
இதையும் படிங்க: முதலுக்கே வந்த மோசம்!.. விஜய் பட தலைப்புக்கு வந்த புது பிரச்சனை!.. சீக்கிரம் சரி பண்ணுங்கப்பா!..
இருவரும் இதுவரை அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றால் கூட இருவரும் டேட்டிங் செல்லும் அத்தனை ஆதாரங்களும் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் வந்துக் கொண்டே தான் இருக்கின்றன.
கீத கோவிந்தம் படத்தைத் தொடர்ந்து டியர் காம்ரேட் படத்திலும் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அதன் பின்னர் தனித்தனியாக நடித்து வரும் இவர்கள் தொடர்ந்து மாலத்தீவுக்கு ஒன்றாக செல்வது. ஒரே ரெசார்ட்டில் தங்கியிருக்கும் புகைப்படங்களை வெளியிடுவது என சுற்றி வந்தனர். கடந்த ஆண்டு அனிமல் படத்தில் ரன்பீர் கபூர் உடன் படு நெருக்கமாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தாலும், அந்த படத்தின் புரமோஷனுக்காக விஜய் தேவரகொண்டா போன் செய்து பேசியிருந்தார்.
இதையும் படிங்க: கலைஞர் 100 விழாவில் அமீர் – சூர்யா சந்திப்பு… அதுக்கு அப்புறம் நடந்ததுதான் ஆச்சர்யம்…
இந்நிலையில், பிப்ரவரி மாதம் ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா இருவரும் நிச்சயம் செய்துக் கொள்ளப் போவதாக உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இதுதொடர்பாகவும் இருவரும் வாயே திறக்கவில்லை.
[ad_2]