[ad_1]
Actor vijay: சமீபகாலமாக விஜய் தொடர்பான செய்திகளில் அடிபடும் பெயர் புஸ்ஸி ஆனந்த். இந்திய விஜய் மக்கள் மன்ற பொறுப்பாளராக இருப்பவர். விஜய்யின் அரசியல் தொடர்பான அத்தனை நடவடிக்கைகளும் இவரின் மேற்பார்வையில்தான் நடந்து வருகிறது. ரசிகர்களை சந்திப்பது, தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திப்பது, மக்களுக்கு உதவுவது என எல்லாவற்றுக்கும் பின்னால் இருப்பவர்தான் இந்த புஸ்ஸி ஆனந்த்.
இவர் புதுச்சேரியில் எம்.எல்.ஏ.வாகவும் விஜய் ரசிகர் மன்ற தலைவரகவும் இருந்தார். எனவே, அவருக்கு முக்கிய பொறுப்பு கொடுத்து கூடவே வைத்துக்கொண்டார் விஜய். ஆனால், இவர் மீது பல சர்ச்சைகளும் இருக்கிறது. ரசிகர்களிடம் கோபப்படுவது உள்ளிட்ட பல வீடியோக்களும் வெளியானது. இதுஎல்லாவற்றையும் விட தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாப்பாடு போடும்போது ஒருவர் கையில் விஜய் படத்தை வைத்துக்கொண்டு வருவது போல அவர் செய்த காமெடி ட்ரோலில் சிக்கியது.
இதையும் படிங்க: கனா பட இயக்குனரை காவு வாங்கிய கார்த்தி.. மனசாட்சியே இல்லையா?!. ரொம்ப ஓவராத்தான் போறீங்க!..
இந்நிலையில், விஜயின் அரசியல் வரவு குறித்து ஊடகம் ஒன்றில் பேசிய பயில்வான் ரங்கநாதன் ‘விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என முடிவெடுத்துவிட்டால் மக்களோடு பயணிக்க வேண்டாம். பனையூரில் ரகசிய கூட்டம் போட்டு பேசுவதெல்லாம் வேலைக்கு ஆவாது. அவருக்கு என்ன கொள்கை இருக்கிறது என்றே தெரியவில்லை. பலரிடமும் அரசியலுக்கு வருவது பற்றி ஆலோசிக்க வேண்டும். ரஜினியே அதை செய்தார். ஆனால், வரவில்லை என சொல்லி விட்டார்.
அதிருப்தி ஓட்டுக்களை விஜய் அறுவடை செய்வார் என சொல்ல முடியாது. அவருடன் இருக்கும் புஸ்ஸி ஆனந்த ஒரு அடி முட்டாள். ரசிகர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதே அவருக்கு தெரியாது. அவரையெல்லாம் உடன் வைத்துக்கொண்டு விஜயால் பெரிதாக சாதிக்க முடியாது.
விஜய் படங்களில் நடிப்பதை நிறுத்தமாட்டார். 200 கோடி சம்பளத்தை யார் வேண்டாம் என சொல்வார்?.. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் விஜய் போட்டியிட வாய்ப்பு இல்லை. அவர் கட்சி ஆரம்பித்தாலும் மக்களிடம் வரவேற்பு இருக்கும் என் சொல்ல முடியாது. மக்கள் பிரச்சனையை பேசாமல் யாரும் மக்கள் தலைவராக மாற முடியாது’ என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சங்கீதாவுக்கு முன்னாடியே விஜய் வாழ்க்கையில் தென்றலாய் வீசிய பெண்! உயிர்த்தோழன் பகிர்ந்த சீக்ரெட்
[ad_2]