Home Cinema News பிக்பாஸ் அர்ச்சனாவின் காதலர் இந்த சீரியல் நடிகரா? ஜோடி பொருத்தம் நல்லாத்தான் இருக்கு – CineReporters

பிக்பாஸ் அர்ச்சனாவின் காதலர் இந்த சீரியல் நடிகரா? ஜோடி பொருத்தம் நல்லாத்தான் இருக்கு – CineReporters

0
பிக்பாஸ் அர்ச்சனாவின் காதலர் இந்த சீரியல் நடிகரா? ஜோடி பொருத்தம் நல்லாத்தான் இருக்கு – CineReporters

[ad_1]

VJ Archana: பல சீரியல்களில் வில்லி ரோலில் கலக்கினாலும் உள்ளத்தில் தான் எப்பேற்பட்டவள் என்பதை நிரூபிப்பதற்காகவே பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தவர் விஜே அர்ச்சனா. ஒரு கொடூரமான வில்லியாகவே பார்த்த மக்கள் பிக்பாஸில் ஒரு செல்லக் குழந்தையாக மாறினார். அவர் ஆசைப்பட்ட படியே மக்கள் அவரை ஒரு நல்ல குணம் படைத்தவர் என்று ஏற்றுக் கொண்டார்கள்.

வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்து பிக்பாஸ் டைட்டிலை வென்று பிக்பாஸ் வரலாற்றிலேயே சாதனை படைத்த ஒரு போட்டியாளராக கருதப்பட்டார். ஆரம்பத்தில் முதல் வாரத்தில் அழுகையும் கண்ணீருமாக இருந்த அர்ச்சனா இரண்டாவது வாரத்தில் இருந்தே பட்டாசு வெடித்ததை போல சரவெடியாக மாறினார். குறிப்பாக இவருக்கும் விஷ்ணுவுக்கும் இடையே அடிக்கடி சண்டை மோதல்கள் இருந்து வந்தன.

இதையும் படிங்க: சினிமா வரலாறில் இதுவரை நடக்காத சம்பவம்! கவின் மீது விழுந்த கரும்புள்ளி.. இன்னும் என்னெல்லாம் நடக்க போதோ

ஆனால் ரசிகர்களும் இதைதான் எதிர்பார்த்தார்கள். பிக்பாஸ் வீடு என்றாலே சண்டை ஒரு பக்கம் இருந்தாலும் ரொமாண்டிக்கான சில சீன்களும் நடக்கத்தான் செய்யும். அந்த வகையில் அர்ச்சனாவை சக போட்டியாளர் ஒருவருடன் தொடர்பு படுத்தி பல மீம்ஸ்கள் வெளிவந்தன. ஆனால் அதை அர்ச்சனா முற்றிலுமாக மறுத்தார்.

இதற்கிடையில் சமீபத்தில் வெளியான ஒரு தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாரதிகண்ணம்மாவில் ஹீரோவாக நடித்தவர் அருண் பிரசாத். இவர் அந்த சீரியலுக்கு பிறகு வேறெந்த சீரியலிலும் நடித்ததாக தெரியவில்லை. திடீரென அவருடைய இணையதள பக்கத்தில் தன் காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இதில்தான் இப்போது பிஸியாக இருக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

இதையும் படிங்க: ஜெய்சங்கரின் ஆசையை நிறைவேற்றிய மகன்! அனைவரின் கவனத்தையும் ஈர்த்த விஜய்சங்கர்

அந்த புகைப்படத்தில் போட்டில் இருவரும் உட்கார்ந்த மாதிரியும் அதை பின்பக்கம் மட்டுமே அருண் காட்டியிருந்தார். ஆனால் அது அர்ச்சனாதான் என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். ஏனெனில் அர்ச்சனாவும் சமீபத்தில் ஏற்காடு சென்றிருக்கிறார். அதில் அவரும் போட்டில் செல்வது மாதிரியான புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்ததும் ரசிகர்கள் அருணின் காதலி அர்ச்சனாதான் என்று கூறிவருகிறார்கள்.

google news

[ad_2]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here