[ad_1]
பாடகி சின்மயி JFW சினிமா விருதுகள் 2024ல் விருது பெற்ற நிலையில், மேடை ஏறி பேசினார். கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் நடிகை திரிஷாவுக்கு குரல் கொடுத்திருந்தார். வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து பேசி வரும் சின்மயியை பாட விடாமலும் டப்பிங் பேச விடாமலும் சினிமா உலகினர் தடுத்து வருவதாக கூறினார்.
லியோ படத்தில் தன்னை டப்பிங் பேச வைக்க லோகேஷ் கனகராஜ் ரொம்பவே தைரியமான முடிவை எடுத்து பண்ண வைத்திருந்தார். அவர் ஒரு இயக்குநர் இல்லை என்னை பொறுத்தவரையில் அவர் ஒரு ஹீரோ.
இதையும் படிங்க: மறுபடியும் அந்த வேலையை ஆரம்பிச்ச ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!.. என்னன்னு நீங்களே வந்து வீடியோவை பாருங்க!..
திரிஷாவுக்கு டப்பிங் பேசியதற்காக ஏகப்பட்ட எதிர்ப்புகள் வந்தது. அதையெல்லாம் லோகேஷ் கனகராஜும் தயாரிப்பாளர் லலித் சாரும் தான் சமாளித்தனர் என்றார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஆர்ஜே விஜய் ஒரு பாட்டு பாடுங்க, நீங்க பாடி கேட்டு ரொம்ப நாள் ஆகுது என்றார்.
அதற்கு உடனடியாக பதில் அளித்த சின்மயி நான் பாட்டுப் பாடியே ரொம்ப நாளாச்சு என ஃபீல் பண்ணி பேச அரங்கில் இருந்த அனைவருமே அமைதியாகி விட்டனர். தனது உயிர் உள்ளவரை பாலியல் குற்றங்களுக்கு எதிரான குரலை கொடுத்து வருவேன் என்றும் தனக்கு இப்படி பேச துணையாக இருப்பது தனது கணவர் மற்றும் மாமனார், மாமியார் தான் எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தம்பி ஒரு விஷயம் சொல்லட்டுமா!.. பர்த்டேவுக்கு செம ட்ரீட் கொடுக்க ரெடியான சியான் விக்ரம்!..
கன்னத்தில் முத்தமிட்டாள் படத்தில் இடம்பெற்ற “தெய்வம் தந்த பூவே” உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய சின்மயி திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுக்கும் டப்பிங் பேசியுள்ளார்.
ராதா ரவி சமீபத்தில் பேசும் போது சின்மயியை டப்பிங் தியேட்டர் காம்பவுண்டுக்குள் கூட விடமாட்டேன் எனக் கூறியிருந்தது பலரையும் ஷாக் ஆக்கியது.
இதையும் படிங்க: அந்த பார்வையே ஆள கொல்லுதே!.. நயனின் அழகை பார்த்து ஏங்கும் புள்ளிங்கோ!.. சூப்பர் பிக்ஸ்!..
[ad_2]