[ad_1]
Actor Simbu: தமிழ் சினிமாவில் சிம்பு ஒரு பெரிய நடிகராக இருந்து வருகிறார். இவரை பற்றி நடிகைகள் விஷயத்தில் தான் ஏகப்பட்ட சர்ச்சைகளை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் சமீபகாலமாக தயாரிப்பாளர்கள் சம்பந்தப்பட்ட விஷயத்திலும் சிம்புவின் பேர் அடிபட்டு வருகிறது. உதாரணமாக ஐசரி கணேஷ்,சிம்பு இடையிலான பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றதை அனைவரும் பார்த்திருப்போம். அப்படி பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் சிம்புவால் வீதிக்கு வந்து நின்றதை தான் இதில் பார்க்க இருக்கிறோம்.
சிம்பு, நயன் இவர்கள் நடிப்பில் வெளிவந்தப் படம் வல்லவன். இந்தப் படத்தை சிம்புதான் இயக்கினார். படத்தை தயாரித்தவர் தேனப்பன். இந்தப் படத்தை ஆறு மாதத்திற்குள் எடுத்து முடித்துத் தருகிறேன் என்று சொல்லி கிட்டத்தட்ட 3 வருட காலம் இழுத்துக் கொண்டே போயிருக்கிறார். காரணம் சரியான நேரத்திற்கு சிம்பு சூட்டிங் வராதது. சொன்ன தேதியில் முடித்துக் கொடுக்காதது என இதனால் தேனப்பன் பல இடங்களில் கடன் வாங்கி வட்டிக்கு மேல் வட்டி கட்டி வந்திருக்கிறார்.
இதையும் படிங்க: கதை பிடித்துப் போக சம்பளமே வாங்காமல் நடித்த நடிகை! இப்ப யாராச்சும் அப்படி இருக்கீங்களா?
சரி. சிட்டி ரைட்ஸையாவது என்னிடம் கொடுத்து விடுங்கள். அதில் வரும் லாபத்தையாவது நான் எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்ல சிம்புவின் அப்பா,அம்மா ஆகியோரை வைத்து சமரசம் செய்து அந்த சிட்டி ரைட்ஸையும் தானே வாங்கிக் கொண்டு தெருவில் விட்டிருக்கிறார் சிம்பு.
அடுத்ததாக கெட்டவன் என்ற படத்தை நந்து இயக்க சிம்பு மற்றும் ஒரு புதுமுக நடிகை நடிக்க இருந்தனர். அதிலும் டைரக்ஷனில் உன் பெயர் போட்டுக் கொள். ஆனால் கதை, திரைக்கதை என என் பெயர்தான் வரவேண்டும் என சிம்பு சொல்லியிருக்கிறார். முதல் படம் என்பதால் நந்துவும் ஓகே சொல்லியிருக்கிறார். ஆனால் வெளியில் மொத்தப் படமும் சிம்புவோடது என பிரதிபலித்திருக்கிறது. அதனால் இந்தப் படமே வேண்டாம் என ஓடிவிட்டாராம் நந்து.
இதையும் படிங்க: மீசைய வளிச்சி விஜயகாந்த் படத்தில் வாய்ப்பு வாங்கிய சரத்குமார்!.. நாட்டாமை செம கில்லாடி!..
அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். அதிலும் பாதி படத்தை முடித்த பிறகு உனக்கு டைரக்ஷனே தெரியவில்லை என மீதி படத்தை நான் எடுத்துக் கொள்கிறேன் என்று சிம்பு சொல்ல நெல்சனும் ஆரம்பித்த இடத்திற்கே சேனலுக்கே சென்று விட்டாராம். ஆனால் இப்போது ஜெய்லர் படத்தால் அவரின் நிலை என்ன என சிம்புவும் அறிவார்.
அடுத்ததாக மைக்கேல் ராயப்பனிடம் டெம்பர் என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் தன்னிடம் இருப்பதாகவும் அதை தமிழில் எடுக்கலாம் எனவும் கூறி அழைத்திருக்கிறார். ஆனால் அது AAA படத்தின் ஸ்கிரிப்ட். உடனே ராயப்பன் டெம்பர்னு சொல்லிவிட்டு இப்பொழுது இந்த மாதிரி ஸ்கிரிப்டை எடுக்கிறீர்கள் என்று கூற அவரை எப்படியோ சமாளித்திருக்கிறார் சிம்பு.
இதையும் படிங்க: எதிர்நீச்சல்: வெளிச்சத்துக்கு வந்த ஈஸ்வரியின் கல்லூரி வேலை…வாயை கொடுத்து கதிரிடம் வாங்கி கட்டும் ஜனனி…
இதிலும் நைட் சூட்டிங் தான் தனக்கு செட் ஆகும் என சொல்லி படத்தை நைட் எஃபக்ட்லேயே எடுத்திருப்பார்கள். ஆனால் படம் அட்டர் ப்ளாப். இதனால் போட்ட காசை எடுக்க முடியாமல் திணறி வருகிறாராம் மைக்கேல் ராயப்பன். இதில் இந்தப் படத்தின் இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரனுக்கு கெட்டபெயர்தான்.
[ad_2]