[ad_1]
Mansoor alikhan: தேவையில்லாமல் பேசி வைரலாகும் மன்சூர் அலிகான் இந்த முறையும் அதேமாதிரியான ஒரு சர்ச்சையில் வசமாக சிக்கிக்கொண்டு இருக்கிறார். இதில் அவருக்கு இன்னோரு ட்விஸ்ட்டாக மகளிர் ஆணையம் களத்தில் இறங்கி இருக்கிறது.
லியோ படத்தில் சமீபத்தில் நடித்து இருந்தார் மன்சூர் அலிகான். அப்போது அவருக்கு ஒரு சில காட்சிகள் மட்டுமே கொடுக்கப்பட்டது. இதையடுத்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியவர். ரோஜா, ரம்யா கிருஷ்ணனை தூக்கி பெட்டில் போட்டு கற்பழிக்கும் காட்சிகள் இருக்கும் என நினைத்தேன்.
இதையும் படிங்க: ஆளவந்தான் படத்தில் அப்பவே அட்வான்ஸ் டெக்னாலஜியா? அப்படின்னா ஏன் படம் ஓடல?
ஆனால் காஷ்மீரில் த்ரிஷாவை என் கண்ணிலே காட்டவில்லை. 150 படங்களில் எத்தனை அட்ராசிட்டி பண்ணி இருக்கோம் என திமிராக பேசினார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து த்ரிஷா தன்னுடைய எக்ஸ் தளத்தில் ஓபனாகவே தன்னுடைய கண்டனத்தினை வலுவாக பதிவு செய்து இருந்தார்.
மிஸ்டர் மன்சூர் அலிகான் என்னை பற்றி மோசமாக பேசிய வீடியோ ஒன்று எனது கவனத்துக்கு வந்தது. அவரது பேச்சை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அவர் மனிதகுலத்துக்கே இழுக்கு. அப்படிப்பட்ட ஒருவருடன் இனி வரும் காலங்களில் நான் நடிக்கவே மாட்டேன் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த விவகாரத்துக்கும் த்ரிஷாவுக்கும் லோகேஷ், கார்த்திக் சுப்புராஜ் போன்ற இயக்குனர்கள் முன்வந்து கண்டனம் தெரிவித்தனர். இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்த நிலையில் மறுப்பு தெரிவிக்கிறேன் என மன்சூர் பேட்டி கொடுத்து இருந்தார்.
இதையும் படிங்க: சூர்யாவை கேவலமாக நடத்தினார்! நடந்தது இதுதான்!.. அமீரின் புகாருக்கு வாய் திறந்த ஞானவேல் ராஜா!..
அதிலும் அவர் மன்னிப்பு கூட கேட்காமல் வேணுமென்றே பிரச்னையை பரப்புகிறார்கள். நான் தேர்தலில் போட்டியிட போறேன். அதுக்கு தான் இப்படி வீடியோவை வெட்டி ஓட்டி பெரிதாக்குகிறார்கள் என்றார். இது பலருக்கும் கடுப்பை கிளப்பியது.
இந்நிலையில் மன்சூர் அலிகானின் இந்த வீடியோவால் கோபமடைந்த மகளிர் ஆணையம் அவர் மீது உடனே வழக்கு போட சொல்லி டிஐபிக்கு உத்திரவிட்டு இருக்கிறது. இந்த பிரச்னை வழக்கானால் கண்டிப்பாக அவர் உடனே கைது செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
[ad_2]