[ad_1]
சியான் விக்ரம் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படவுள்ளநிலையில் சியான் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது தொடர்பான போஸ்ட் ஒன்றை தற்போது நடிகர் விக்ரம் தனது சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.
1966 ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி சென்னையில் பிறந்த கென்னடி ஜான் விக்டர் சினிமாவில் விக்ரமாக நுழைந்த நிலையில், பல படங்களில் நடித்து தோல்வியை தழுவினார். சேது படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னதாக சுமார் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் விக்ரம் நடித்திருந்தார். ஆனால், பாலா இயக்கத்தில் வெளியான சேது படம் தான் சியானாக விக்ரமை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது.
இதையும் படிங்க: அந்த பார்வையே ஆள கொல்லுதே!.. நயனின் அழகை பார்த்து ஏங்கும் புள்ளிங்கோ!.. சூப்பர் பிக்ஸ்!..
அந்த படத்திற்கு பிறகு தொட்டதெல்லாம் தூள் கிளப்பும் விதமாக தில், தூள், சாமி, காசி, ஜெமினி, ஆறு என ரவுண்டு கட்டி வெற்றி படங்களாக கொடுத்து வந்தார் விக்ரம்.
ஷங்கர் இயக்கத்தில் அந்நியன், ஐ என மிரட்டிய விக்ரம் சுசி கணேஷ் இயக்கத்தில் கந்தசாமி படத்தில் கர்ஜித்தார். மணிரத்னம் இயக்கத்தில் ராவணன், பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 என வேற லெவல் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
இதையும் படிங்க: டேன்ஸ் மாஸ்டர் வீட்டுக்கே போய் விடிய விடிய பயிற்சி எடுத்த விஜய்!.. அட அந்த படத்துக்கா!…
பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி அவருக்கு ஏகப்பட்ட விருதுகளை அள்ளிக் கொடுக்க காத்திருக்கும் நிலையில், அடுத்ததாக சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் 62 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் நாளை விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என தெரிகிறது.
தம்பி .. !!
உனக்கு ஒரு விசயம் சொல்லட்டுமா?!#Chiyaan62 pic.twitter.com/Y5FAUfMnaU— Vikram (@chiyaan) April 16, 2024
” தம்பி உனக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா” என கேப்ஷன் கொடுத்து சியான் 62 ஒன் டே டு கோ என பதிவிட்டுள்ள போஸ்டரை வெளியிட்டுள்ளார் சியான் விக்ரம்.
இதையும் படிங்க: அந்த மனைவி வாய்த்தது அவள் செய்த பாவம்… இவளோ நான் செய்த பாக்கியம்! பாலுமகேந்திராவா இப்படி சொன்னாரு!..!
[ad_2]