Home Cinema News தங்கலானா முக்கியம்!.. தங்கம் எப்படி ஏறி இறங்கி வொர்க்கவுட் பண்றாங்கன்னு பாருங்கடா!.. – CineReporters

தங்கலானா முக்கியம்!.. தங்கம் எப்படி ஏறி இறங்கி வொர்க்கவுட் பண்றாங்கன்னு பாருங்கடா!.. – CineReporters

0
தங்கலானா முக்கியம்!.. தங்கம் எப்படி ஏறி இறங்கி வொர்க்கவுட் பண்றாங்கன்னு பாருங்கடா!.. – CineReporters

[ad_1]

தங்கலான் பட ஹீரோயின் மாளவிகா மோகனன் ஏறி இறங்கி வொர்க்கவுட் செய்யும் லேட்டஸ்ட் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வியர்க்க வைத்து வருகிறார். பேட்ட படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்ததை சமீபத்தில் படக்குழு கொண்டாடிய நிலையில், ரஜினிகாந்த் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானது குறித்து நீண்ட பதிவை வெளியிட்டு இருந்தார் மாளவிகா மோகனன்.

பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக அறிமுகமான இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த படத்தில் இவர் கோபமாக விஜய்யை திட்டிப் பேசும் காட்சிகளை வைத்து ரசிகர்கள் மரண ட்ரோல் செய்திருந்தனர்.

இதையும் படிங்க: அடியாத்தி!.. தொடையை தாண்டிக் காட்டுறாரே.. ஜெயம் ரவி ஹீரோயினா இப்படி.. சும்மா ஜிவ்வுன்னு ஏறுதே!..

அடுத்து தனுஷ் நடிப்பில் நேரடியாக ஓடிடியில் வெளியாகி ஓடாமல் போன மாறன் படத்திலும் மாளவிகா தான் நடித்திருந்தார். பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், பார்வதி, பசுபதி நடிப்பில் உருவாகி உள்ள தங்கலான் படம் பொங்கலுக்கு வரும் என்றும் ஜனவரி 25ம் தேதி குடியரசு தினத்துக்கு வெளியாகும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசியில் ரிலீஸ் தேதியை இன்னமும் அறிவிக்காமல் படக்குழுவினர் அப்படியே அந்த படத்தை மறந்து விட்டனர்.

இதையும் படிங்க: இன்னைக்கு வேற சட்டை!.. கேரவன் மேல ஏறி மீண்டும் ரசிகர்களுக்கு கையசைத்த விஜய்!.. வைரலாகும் வீடியோ!..

இந்நிலையில், ரசிகர்களை தொடர்ந்து டச்சில் வைத்திருக்கும் மாளவிகா மோகனன் பென்ச் மீது ஏறி இறங்கி தனது கால்களை வலுவாக்கும் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். தங்கலான் படம் எப்போது வரும் என ரசிகர்கள் அவரிடம் நச்சரித்து வர சில தீவிர மல்லு ரசிகர்கள் தங்கலானா முக்கியம் தங்கம் வொர்க்கவுட் பண்றதை பாருங்கடா என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

 



[ad_2]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here