[ad_1]
Actor Kamal: தமிழ் சினிமாவில் மாபெரும் ஆளுமையாக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று சினிமாவையே தன் கைக்குள் வைத்திருக்கும் ஒரு உன்னத நடிகராக இருப்பவர் நடிகர் கமல்.
சிவாஜிக்கு அடுத்தபடியாக நடிப்பில் அரக்கனாக இருப்பவர் கமல். நடிப்பிற்கு அடையாளமாக இன்றுவரை கமல், சிவாஜி இவர்களைத்தான் இந்த சினிமா போற்றி வருகிறது. புதிய புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் இருந்து சினிமாவின் போக்கையே மாற்றிய பெருமை கமலையே சேரும்.
இதையும் படிங்க: கேப்டனை மறக்காத கேப்டன் மில்லர்!.. ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்!..
எத்தனை தலைமுறை போனாலும் இந்த மாதிரி ஒரு நடிகர் இருந்தார் என்று சொல்லுமளவிற்கு கமலின் புகழ் பாடிக் கொண்டே இருக்கும் இந்த சினிமா. அந்தளவுக்கு ஒரு ஆகச்சிறந்த நடிகராக இப்பொழுதுவரை கமல் இருந்து கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் கமல் பற்றி ஒரு சுவாரஸ்ய தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகின்றது. அதாவது கமல் நடிப்பில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த படம்’டிக் டிக் டிக்’. ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்திற்கு இணையாக எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக மாதவி, ராதா போன்றோர் நடித்திருப்பார்கள்.
இதையும் படிங்க: அவ்வளவு வெறி மாப்பிள்ளைக்கு!.. 2ம் திருமணம் முடிந்த கையோடு அம்மாவான அமலா பால்!..
இளையராஜா இசையில் இந்த படத்தில் அமைந்த அனைத்து பாடலகளும் சூப்பர் டூப்பர் ஹிட். குறிப்பாக இது ஒரு நிலா காலம் என்ற பாடல் எக்காலத்தும் புகழ்பெற்ற வகையில் அமைந்திருக்கும். இந்த நிலையில் டிக் டிக் டிக் படத்தில் எல்லா வேலைகளும் முடிந்து விட்டதா? என்று கமல் கேட்டிருக்கிறார்.
படக்குழுவும் ஆமாம் என்று சொல்ல அதன் பிறகே கமல் வெளியூர் பயணம் சென்றாராம். ஆனால் படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டும் டப்பிங் வேலை இருந்ததாம். உடனே பாரதிராஜா சித்ரா லட்சுமணனை வைத்து அந்த காட்சிகளில் கமலுக்கு டப்பிங் பேச வைத்து படமாக்கினாராம்.
இதையும் படிங்க: ஒரு படத்தை காலி பண்ணிட்டு!.. இப்படி ஜாலியா இருக்க உன்னால மட்டும் தான் முடியும்.. ரசிகர்கள் கலாய்!
[ad_2]