[ad_1]
மலேசியா வாசுதேவன் உள்பட காந்தக்குரல் பாடகர்கள் நிறைய பேர் உண்டு. அந்த வகையில் மறக்க முடியாத பாடகர் ஜெயச்சந்திரன். இவரது பாடல்களைக் கேட்டாலே போதும். நம் மனதில் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் பறந்து விடும். அந்தக்காலத்தில் இலங்கை வானொலியில் இவரது பாடல்களை அடிக்கடி ஒலிபரப்புவார்கள். சித்திரை செவ்வானம் சிரிக்கக் கண்டேன், ஆடி வெள்ளி தேடி உன்னை, வசந்தகால நதிகளிலே ஆகிய பாடல்களைக் கேட்கும்போது நம் காதில் தேன் வந்து பாய்வது போல இருக்கும்.
கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்ற இரு ஜாம்பவான்களின் குரலையும் மிக்ஸ்சிங் செய்தால் எப்படி இருக்குமோ அது தான் ஜெயச்சந்திரனின் வாய்ஸ். இவரது அப்பா மிகப்பெரிய இசைக்கலைஞராம். கொச்சி அரச பரம்பரையை் சேர்ந்தவராம். ஆனாலும் எளிமைக்கு இலக்கணமாகவே வாழ்ந்தார்களாம்.
ஜெயச்சந்திரனின் முதல் படம் குஞ்சாலி மரக்கார் எனும் மலையாளப்படம். இந்தப் படத்தில் தான் முதன்முதலாகப் பாடியுள்ளார். அடுத்ததாக களித்தோழன் என்ற படம். கேரள ரசிகர்களை இவரது குரல் மெய்மறக்கச் செய்தது.
தமிழில் எம்.எஸ்.விஸ்வநாதன் இயைில் மூன்று முடிச்சு படத்தில் ஒரு பாடலைப் பாடினார். வசந்தகால நதிகளிலே என்ற அந்தப் பாடலில் அப்படி ஒரு ரசனை இருக்கும். இன்று வரை அந்தப்பாடல் ட்ரெண்ட்செட்டாகி உள்ளது. அதே போல அதே படத்தில் வாணி ஜெயராமுடன் இணைந்து ஆடிவெள்ளி தேடி உன்னை என்று ஒரு பாடலைப் பாடியிருப்பார்.
அது செம மாஸ் ஹிட். அதே போல 1978ல் காற்றினிலே வரும் கீதம் என்ற ஒரு படம் வெளியானது. இந்தப்படத்தில் இடம்பெற்ற ‘சித்திரை செவ்வானம்’ பாடல் அவ்வளவு சுகமான ராகம். இப்போது கேட்டாலும் நமக்கு இதமான வருடலாக இருக்கும்.
இளையராஜாவின் இன்னிசையில் பல பாடல்களைப் பாடியுள்ளார். வைதேகி காத்திருந்தாள் படத்தில் ராாத்தி உன்னைக் காணாத, காத்திருந்து காத்திருந்து ஆகிய பாடல்கள் காலம் கடந்தும் பேசப்படுபவை. கடல் மீன்கள் படத்தில் இவர் பாடிய ‘தாலாட்டுதே வானம்’ இப்போது கேட்டாலும் நம்மைத் தாலாட்டும். கிழக்குச் சீமையிலே படத்தில் இவர் பாடிய ‘கத்தாழம் காட்டுவழி’ பாடலுக்குத் மாநில விருது கிடைத்தது. அம்மன் கோவில் கிழக்காலே படத்தில் ‘பூவை எடுத்து ஒரு மாலை’ பாடல் பிரமாதமாக இருக்கும்.
இப்படியாக இவரது காந்தக்குரலால் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் இவருக்கு என்று தனிக்கூட்டம் உருவாக ஆரம்பித்தது.
[ad_2]