[ad_1]
ஒரு திரைப்படம் துவங்கப்படும் முன்னர் அதற்கான பூஜை, புனஷ்காரங்கள் செய்யப்படும். ஜாதி, மத வேறுபாடின்றி இன்று வரை இந்த பழக்கம் இருந்து வருகிறது. தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு சடங்காகவும் பார்க்கப்படுகிறது.
திரையில் வந்தால் மட்டும் போதும், நீங்கள் வேறு ஏதுவும் செய்ய வேண்டாம் என நினைக்கும் ரசிகர்களை கொண்ட பெரிய நடிகர்கள் கூட இதற்கு விதி விலக்கல்ல என்றும் சொல்லலாம். “வசூல் மன்னன்”, ‘தயாரிப்பாளர்களின் பொக்கிஷம்’ என கொண்டாடப்பட்ட எம்.ஜி.ஆர். ஒரு குறிப்பிட்ட ஆங்கில மாதத்தில் வெளியிட்ட படங்கள் எல்லாமே அதிரடி வெற்றி. ‘தை’ மாதம் “பொங்கல் பண்டிகை” தினத்தை குறிவைத்து இவரது படங்கள் அதிகமாக வெளிவரும்.
எங்கு, எப்பொழுது திரைக்கு வந்தாலும் அது வெற்றி தான் என சொல்ல வைத்தவர் எம்.ஜி.ஆர். அவரது முதல் விருப்ப தேர்வு ‘தை’மாதம் தான். அவரின் பண்ணிரண்டு படங்கள் அதுவும் சாதாரண ஹிட் அல்ல, மெகா ஹிட் என சொல்ல வைத்த படங்கள் அவை, எம்.ஜி.ஆரின் நேரடி தயாரிப்பான “அடிமைப்பென்”, “உலகம் சுற்றும் வாலிபன்” படங்கள் கூட இந்த குறிப்பிட்ட மாதத்தில் தான் வெளியிடப்பட்டது.
தியாகராஜ பாகவதருக்கு இணையான பெயரை பெற்றுக்கொடுத்த “ராஜகுமாரி”, எம்.ஜி.ஆரை அடுத்த கட்டதிற்கு எடுத்துச்சென்ற படம் அது. கருணாநிதி, எம்.ஜி.ஆர் இருவருக்குமிடையே நெருக்கமான நட்பு பிறந்தது இந்த படத்தில் தான் என சொல்லப்பட்டது. “என் தங்கை” எம்.ஜி.ஆரின் குடும்பப்பாங்கான படங்களில் முக்கியமான ஒன்று.
“பெரிய இடத்து பெண்”, “சந்திரோதயம்”, “அரச கட்டளை”, “என் அண்ணன்”, “ரிக்ஷாக்காரன்”, போன்ற படங்களும் இந்த மாதத்தில் தான் வெளிவந்தது. அப்படி அவருடைய வெற்றிக்கு கை கொடுத்த அந்த மாதம் “மே” மாதம். “உழைப்பாளிகள் தினம்” இந்த மாதத்தில் தான் கொண்டாடப்பட்டு வருகின்றது. எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்த “நினைத்ததை முடிப்பவன்”, “உழைக்கும் கரங்கள்”, “இன்று போல் என்றும் வாழ்க” உள்ளிட்ட படங்கள் கூட இந்த மாதத்தில் தான் வெளியானது.
இப்படி அவர் இந்த குறிப்பிட்ட மாதத்தின் மீது ஏன் இவ்வளவு கவனம் செலுத்தினார், அல்ல அவையெல்லாம் இயற்கையாக அமைந்ததா? என்பதன் ரகசியம் இன்று வரை தெரியவில்லை.
[ad_2]