[ad_1]
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை சொல்லியாக இருப்பவர் மிஷ்கின். சினிமாவை இப்படியும் எடுக்கலாம் என திரையுலகினருக்கு காட்டியவர். அதன் மூலம் ரசிகர்களுக்கும் புது அனுபவத்தை ஏற்படுத்தியவர். குறிப்பாக வித்தியாசமான கோணங்களில் காட்சிகளை காட்டும் இயக்குனர் இவர்.
சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ ஆகிய திரைப்படங்களை இயக்கி சிறந்த இயக்குனராக கருதப்படுபவர். ஆண்ட்ரியாவை வைத்து பிசாசு 2 படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் இன்னும் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: விஜயகாந்துக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்த கமெடி நடிகர் அவர்தான்!.. ஆச்சர்ய தகவல்!..
மிஷ்கின் மீது எப்போதும் ஒரு விமர்சனம் உண்டு. படப்பிடிப்பில் தனது உதவியாளர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டுவார்.. நடிகர்கள், நடிகைகளிடம் கோபமாக நடந்துகொள்வார் என சொல்வதுண்டு. சைக்கோ படம் எடுக்கும்போது கூட நித்யா மேனனினிடம் அவர் கோபப்பட்டு பேச அவர் கோபித்துக்கொண்டு ‘அவர் என்னிடம் சாரி கேட்டால் மட்டுமே நடிப்பேன்’ என சொல்லிவிட அவரிடம் மிஷ்கின் சாரி கேட்ட சம்பவமும் நடந்தது.
இயக்குனர் சேரனை வித்தியாசமான கதாபத்திரத்தில் நடிக்க வைத்து மிஷ்கின் இயக்கிய திரைப்படம் யுத்தம் செய். சேரனை யாரும் இதுவரை அப்படி பார்த்திருக்கவே மாட்டார்கள். இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய மிஷ்கினிடம் உங்களுக்கும் இயக்குனர் சேரனுக்கும் என்ன பிரச்சனை என கேள்வி கேட்கப்பட்டது.
இதையும் படிங்க: ட்ரிபிளா திருப்பிக் கொடுக்கிறதுனா இதுதான்!.. ஜவான் 3வது நாளில் செய்த பாக்ஸ் ஆபிஸ் சம்பவம்!..
அதற்கு பதிலளித்த மிஷ்கின் ‘யுத்தம் செய்’ படத்தின் படப்பிடிப்பில் எனது உதவியாளர்களை திட்டுவது சேரனுக்கு பிடிக்கவில்லை. அவரை திட்டுகிறேன் என நினைத்துக்கொண்டார். நான் அவரிடம் ‘அப்படி உங்களை திட்டுவது என்றால் கண்டிப்பாக உங்களிடமே திட்டுவேன். இப்படி மறைமுகமாக திட்டமாட்டேன்’ என சொன்னேன். அவர் ஒரு இயக்குனர். அவருக்கு ஒரு இயக்குனரின் மனநிலை தெரியும். எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை.
படம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்பு ஜாலியாக சரக்கடித்து பார்ட்டி கொண்டாடினோம். நானும் எனது உதவியாளர்களும் நடனமாடி கொண்டிருந்தோம். இதைப்பார்த்த சேரனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஏனெனில், அவரின் உதவியாளர்கள் அப்படி இருக்க மாட்டார்கள். அவரையும் இரண்டு பெக் குடிக்க வைத்தோம். அவர் நான் குடிக்க மாட்டேன் என சொன்னார். கட்டாயப்படுத்தி குடிக்க வைத்தோம். நாங்கள் நல்ல நண்பர்கள்தான்’ என மிஷ்கின் அதில் பேசியிருந்தார்.
இதையும் படிங்க: ஒத்த போஸ்டர்ல மொத்த சோலியும் முடிச்சிட்டீங்களே!.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் கதை இதுதானா!
[ad_2]