[ad_1]
கெட்டவார்த்தையில் படத்தில் வசனங்கள் இடம்பெறுவது இப்போது பேஷனாகிவிட்டது. இது நல்லதல்ல என்று கடுமையாக விமர்சிக்கிறார் இந்த பிரபலம். என்ன சொல்கிறார் என பாருங்கள்.
சித்தார்த் நடித்த சித்தா படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பெண் குழந்தை வளர்ப்பில் உள்ள சிக்கல்கள் குறித்து அருமையாக எடுத்து இருந்தார். இந்த படத்தைத் தயாரித்தவர் சித்தார்த். இந்த நிலையில் அந்தப் படத்திற்கு விருது கொடுத்து பாராட்டு விழா நடந்தது. அனிமல் படத்தைப் பார்க்கும்போது ஆண் ஆதிக்கம், பெண்களை இழிவாகவும் எடுத்த படம்.
இதைப் பார்க்க முடிகிறபோது சித்தா படத்தைப் பார்க்க முடியவில்லை என்பது படத்தைப் பார்ப்பவர்களின் பிரச்சனை தான். அனிமல் படத்தை பெண்கள் மட்டுமல்ல. ஆண்களே பார்க்க முடியாது. இந்;தப்படத்திற்கு பல விருதுகளும் கொடுத்து கொண்டாடுகிறார்கள்.
வன்முறையாகப் படம் எடுக்கும் ஒருவர் தனது துறையில் இருந்தாலும் நான் விமர்சிப்பேன் என்கிறார் சித்தார்த். அந்த விதத்தில் அனிமல் படத்தைப் பற்றியும் ஓபன் டாக் கொடுத்துள்ளார். அதே போல விஷால் நடிப்பில் ஹரி இயக்கத்தில் ரத்னம் படம் வருகிறது. படத்தின் டிரெய்லரில் விஷாலும், வில்லனும் கெட்டவார்த்தை பேசுகின்றனர். இது வட சென்னை இயல்புன்னு ஹீரோவே பேச ஆரம்பித்து விட்டார்கள்.
யதார்த்தமாகக் காட்டுவதாக பலரும் கெட்டவார்த்தை பேசுகிறதாக படத்தில் எடுக்கிறார்கள். இது வெற்றிமாறன் படத்திலும், ஹரி படத்திலும் வந்துள்ளது. இது ஒரு ஹீரோயிசமாகவே பார்க்கப்படுவது வேதனை. விஷாலுக்கு மாஸ் ஹிட் கொடுத்து நீண்ட நாள்களாகி விட்டது. அதனால் மீண்டும் தாமிரபரணி போல ஹிட் கொடுக்க வேண்டும் என்று நினைத்து ஹரியுடன் கைகோர்த்துள்ளார் விஷால்.
சித்தார்த்தைப் பொருத்தவரை பெண்களை இழிவு படுத்தும் வசனங்கள் பேசுவது அனிமல் படத்திற்கு மட்டுமல்ல. விஷால் படமான ரத்னம் படத்திற்கும் இது பொருந்தும். ‘நீங்கள்லாம் ஆம்பளைங்களா? நீங்கள்லாம் மிருகங்கள்டா… இந்த மாதிரி காட்சிகள், பெண்களை இழிவு படுத்துவது, கெட்ட வார்த்தை பேசுவது என உன் புத்தி ஏன் இப்படி போகுதுன்னு சித்தார்த் செருப்படி கொடுத்தது விஷாலுக்கும் பொருந்தும்’ என பிரபல யூடியூபரும், சினிமா விமர்சகருமான ஜீவ சகாப்தன் தெரிவித்துள்ளார்.
[ad_2]