[ad_1]
மணிரத்னம் இயக்கிய பம்பாய் படத்தில் அறிமுகமாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியவர் நடிகை மனீஷா கொய்ராலா. குச்சி குச்சி ராக்கம்மா, உயிரே, உயிரே, அந்த அரபிக்கடலோரம் என நம்மை முதல் படத்திலேயே கவர்ச்சி மழையில் திணறடித்தவர். இந்தியன், முதல்வன் என்று இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் சூப்பர்ஹிட் தான்.
இவர் புகழின் உச்சியில் இருந்த போது மதுப்பழக்கத்திற்கு அடிமையானாராம். முதல்வன் படத்தின் போது சூட்டிங் ஸ்பாட்டுக்கே மது குடித்து விட்டு தாமதமாக வந்தாராம். இதனால் இயக்குனர் ஷங்கருக்கு அதிருப்தி ஏற்பட்டது. அவருக்குக் கவுன்சிலிங் கொடுக்க முடிவு செய்தார். ஒரு பிரபல நடிகரின் மனைவி அவருக்குக் கவுன்சிலிங் கொடுத்ததாகவும், அதன்பிறகு மனீஷாவும் மதுப்பழக்கத்தை நிறுத்திவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க… பா.ரஞ்சித் செய்தது தவறா?.. ரஜினிக்கு இதெல்லாம் தெரியாதா?!.. பிரபலம் சொல்றத கேளுங்க!…
மனீஷா கொய்ராலாவுக்கு படவாய்ப்புகள் குறைந்தாலும், அவர் திருந்தியதற்கு அந்த நடிகை தான் காரணமாம். தொடர்ந்து அவர் நேபாளத்திற்கேச் சென்று விட்டார். அந்த நேரத்தில் அங்கு நிலநடுக்கம் வந்தபோது ஏராளமானோர் பாதிக்கப்பட்டார்களாம். உடனே தனது தொண்டு நிறுவனத்துடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பொதுச்சேவையும் செய்தாராம். அப்போது அவர் உலகப்புகழ் அடைந்தார். அதன்பிறகு அவருக்கு திடீரென கேன்சர் வரவே அதைக் கண்டு கலங்காமல் அதற்காக சிகிச்சை எடுத்தாராம்.
மரணத்தின் விளிம்பு வரை சென்று தான் குணமடைந்தாராம். அதன்பிறகு அவர் நடிப்பு, மாடலிங், தொண்டு என எல்லாவற்றையும் விட்டு விட்டாராம். மன அமைதி தேடி ஆன்மிகத்திற்குச் சென்றாராம். தொடர்ந்து பாலிவுட்டில் வாய்ப்பு வரவே நடிக்க ஆரம்பித்தார். அப்போது தான் பாபா பட வாய்ப்பும் கிடைத்ததாம். அந்தப்படத்தை ரொம்ப எதிர்பார்த்தாராம்.
ஆனால் சறுக்கி விட்டதாம். அதில் நடித்தது மிகப்பெரிய தவறு என்று பின்னர் பேட்டி ஒன்றில் தெரிவித்தாராம். தற்போது மீண்டும் இந்தியன் 2ல் கமலுடன் நடிக்க உள்ளார். ரசிகர்களின் மத்தியில் இவருக்கு மீண்டும் வரவேற்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
[ad_2]