[ad_1]
தமிழ்த்திரை உலகில் வெள்ளிக்கிழமை ஹீரோ, தென்னகத்து ஜேம்ஸ்பாண்டு என்று அன்போடு அழைக்கப்படுபவர் ஜெய்சங்கர். இவர் 70களில் வருடத்திற்குப் பத்து படங்கள் நடிப்பாராம். இவரது படங்கள் எல்லாமே வெள்ளிக்கிழமை தான் ரிலீஸ் ஆகுமாம். அதனால் தான் இவருக்கு அந்தப் பெயரே வந்தது.
இவர் நடிக்கும் படங்கள் எல்லாமே தயாரிப்பாளர்களுக்கு நஷ்டமே வராதாம். தாய்மார்களின் மத்தியில் பேராதரவு பெற்ற நடிகர். இவர் நடித்த துப்பறியும் படங்கள் எல்லாமே ஹாலிவுட்டில் நடிக்கும் ஜேம்ஸ்பாண்டு படங்களுக்கு நிகராக இருப்பதால், இவரை தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்டு என்றும் சினிமா வட்டாரத்தினர் அழைத்தனர். சிஐடி சங்கர் படமே அதற்கு சாட்சி.
இவரைப்பற்றி, பிரபல சினிமா வசனகர்த்தாவும், இயக்குனருமான சித்ராலயா கோபு இவ்வாறு சொல்கிறார்.
70களில் எல்லாம் சில லட்சங்கள் இருந்தால் போதும். தரமான படங்கள் தயாரித்து நல்ல லாபம் பார்த்துவிடலாம். இதற்குக் காரணமே அப்போது கொடிகட்டிப் பறந்த நடிகர்கள் தான். ஜெய்சங்கர், முத்துராமன் போன்றவர்கள் தான் என்று சொல்லும் இவர் குறிப்பாக ஜெய்சங்கரைப் பற்றி இப்படி சொல்கிறார்.
ஜெய்சங்கர் தங்கமான இதயம் கொண்டவர். 70களில் வருடா வருடம் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துக் கொடுத்தார். இவர் கேட்கும் சம்பளமும் குறைவு. அந்தக் குறைந்த சம்பளத்திலும் பாக்கின்னா, அதையும் கேட்கவே மாட்டாராம். அவங்களுக்கு என்ன கஷ்டமோ, தர முடியாம இருக்காங்கன்னு சொல்வாராம். அது மட்டுமல்லாமல், கிடைக்கும்போது தரட்டும்னு அப்படியே இருந்துவிடுவாராம். அவர்களைப் போய் பாக்கிய கொடு, பாக்கிய கொடுன்னு டார்ச்சர் பண்ண மாட்டாராம்.
அதே போல அவர்களுக்கு பணம் கிடைத்தும் தராமல் போனாலும் பரவாயில்லை என்று விட்டுவிடுவாராம். அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ரிலாக்ஸாக இருப்பாராம்.
இதையும் படிங்க… நடிகர் திலகத்துக்கு நடிப்பின் மீது ஆசை வர காரணம் என்ன தெரியுமா?!. அட இது தெரியாம போச்சே!…
அதே போல கால்ஷீட் விஷயத்தில் சொதப்ப மாட்டார். சொன்ன நேரத்துக்குக் கரெக்டா வந்துவிடுவார். அதே மாதிரி இந்த வில்லனைப் போடுங்க. அந்த நடிகையைப் போடுங்கன்னும் சொல்லவே மாட்டாராம். தான் உண்டு. தன் வேலை உண்டுன்னு கடமையே கண்ணா இருப்பாராம். இப்படியும் நடிகர்கள் அந்தக்காலத்தில் இருந்தார்களா என்று ஆச்சரியப்பட வைக்கிறார் ஜெய்சங்கர்.
[ad_2]