[ad_1]
நடிகை சதா குறித்து திரை பிரபலம் சொன்ன தகவல் ஓன்று இணையத்தில் வெகுவாக பரவி வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை சதா. நடிகை சதா முதல் முதலில் ஜெயம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழ் ரீமேக்கிலும் ஜெயம் படத்தில் நடிகர் ஜெயம் ரவி ஜோடியாக நடித்து தமிழ் மொழியில் நடிகையாக அறிமுகமானார்.
இத்திரைப்படத்தில் இவருக்கு தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. ஜெயம் படத்தில் நடித்ததற்காக சதாவிற்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார். அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே ஹிட் கொடுத்த நடிகை சதா அவர்களுக்கு தொடர்ச்சியாக அடுத்தடுத்த பெரிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அடுத்ததாக இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம்ஜோடியாக அந்நியன் திரைப்படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்தார். இதனை தொடர்ந்து, பல மொழி படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த நடிகை சதா ஒரு சில தோல்வி படங்களால் மார்க்கெட்டை இழந்தார். நடிகை சதா தமிழில் இறுதியாக நடித்த படம் “டார்ச் லைட்” அதன் பிறகு நடிகை சதாவை வேறு எந்த படங்களில் காண முடியவில்லை.
சதா சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை சதா அவ்வப்போது கவர்ச்சியான சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். திரையுலக பிரபலங்கள் குறித்து சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு வரும் பயில்வான் ரங்கநாதன் தற்போது சதா குறித்து பகிர் குற்றச்சாற்றுகளை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், நடிகை சதா எப்போதும் புகைபிடித்து கொண்டு இருப்பார். அதை நானே நேரில் பார்த்து இருக்கிறேன். அவரது கெட்ட பழக்கத்தால் தான் அவரது வாழ்க்கை பாதித்து இருக்கிறது. அவர் போதைக்கு அடிமையானதால் தான் பல திரைப்படங்களில் இருந்து நீக்கப்பட்டார் என்று பயில்வான் கூறியுள்ளார்.
[ad_2]