[ad_1]
Singapore saloon: ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகி இருக்கும் சிங்கப்பூர் சலூன் படத்தின் டிரைலர் ரிலீஸாகி வைரலாகி வருகிறது. ஒரு டிரைலரே மாஸா இருந்த படத்தை எப்படி மிஸ் செய்வோம் என ரசிகர்களும் தொடர்ந்து கமெண்ட் செய்து வரும் நிலையில் டிரைலரில் என்ன இருக்கிறது பார்க்கலாம்.
வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் கோகுல் இயக்கி இருக்கும் திரைப்படம் சிங்கப்பூர் சலூன். இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, சத்யராஜ், லால் மீனாட்சி செளத்ரி, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் லோகேஷ், ஜீவா கேமியோ வேடத்தில் தோன்றி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: எலி தானா சிக்கப்போகுது!… சொன்ன கதையை உண்மையாக்க நினைத்து சிக்க போகிறாரா ரோகினி?
மேலும் ஒரு கோலிவுட் செலிபிரிட்டியும் இந்த படத்தில் நடித்து இருப்பதாகவும் அவர் குறித்த தகவல் சர்ப்ரைஸாகவும் படக்குழு வைத்து இருக்கிறதாம். இப்படத்தில் லால் ஒரு முடிவெட்டும் பார்பர் அவரை பார்த்து சின்ன வயதில் இருந்து இம்ப்ரஸாகி விடுகிறார் ஆர்.ஜே.பாலாஜி.
இன்ஜினியரிங் முடிக்கும் அவருக்கு வேல்ஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்தும் ஹேர் ஸ்டைலிஸ்ட்டாகும் தன் பேஷனை சொல்லி அந்த ஆபரை மறுத்துவிடுகிறார். அதில் அவருக்கு ஏற்படும் போராட்டமே படத்தின் கதையாக இருக்கும். மாமனாராக சத்யராஜ் நடித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: ஜவ்வா இழுக்கிறதுனா இதானா? எப்பங்க இந்த டைவர்ஸ் கேஸ முடிப்பீங்க!… புலம்பும் ரசிகர்கள்
இப்படத்தில் முடி வெட்டுறது குலத்தொழில் தானே என ஆர்.ஜே.பாலாஜி அப்பா கேட்க அப்போ இன்ஜினியரிங் நம்ம குலத்தொழிலா என நச் கேள்வியில் பல நாட்களாக சமூகத்தில் இருந்த கருத்து உடைக்கப்படுகிறது. மேலும் சக்சஸ் நாட் அன் ஆப்ஷன். மஸ்ட் என பாலாஜி சொல்லும்போது புல்லரிக்காமல் இருக்காது. டிரைலரே இத்தனை மாஸ் மூவ்மெண்ட் இருக்கும் போது படமும் ஹிட் அடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
[ad_2]