[ad_1]
தமிழ்த்திரை உலகில் அனைவராலும் போற்றப்பட்ட பல நடிகர்கள் நம்மை விட்டு மறைந்து விட்டனர். அவர்களில் சமீபத்தில் மறைந்தவர் கேப்டன் விஜயகாந்த். அவர் மறைந்தாலும் அவரது புகழ் என்றுமே மறையாது என்பது இன்று வரை கண்கூடு. அந்தவகையில் விஜயகாந்த் பற்றி தலைவாசல் விஜய் பல கருத்துகளை பகிர்ந்துள்ளார். என்னவென்று பார்ப்போமா…
திரைப்படக்கல்லூரி மாணவர்களுக்கு அறிமுகம் கொடுத்தது கேப்டன் விஜயகாந்த் தான். இயக்குனர்கள் அரவிந்த்ராஜ், ஆர்.கே.செல்வமணி, ஆபாவாணன், ராம்கி, அருண்பாண்டியன் என பலரும் அவர் மூலமாகத் தான் வந்தோம். அவர் காட்டிய வழி தான் இன்று திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு அங்கீகாரமும் கொடுத்தது. ஊமைவிழிகள், மாநகர காவல், கேப்டன் பிரபாகரன் என பல படங்கள் உள்ளன.
இதையும் படிங்க… ஐஸ்வர்யாவின் ஆசையில் மண்ணைப் போட்ட ஜெயம் ரவி!.. கல்லா கட்டுமா லால் சலாம்?…
91ல் தான் நான் சினிமாவில் நுழைந்தேன். கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் அவருடன் நடித்துள்ளேன். காந்தி பிறந்த மண், வல்லரசு, நரசிம்மா, தமிழ்செல்வன் என நிறைய படங்களில் நடித்துள்ளேன். மற்றவங்களுக்கு சாப்பாடு போட்டு திருப்தி அடையும் நல்ல மனுஷன். மற்றவங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனைன்னா முன்ன நின்னு செய்வார்.
நரசிம்மா பட சூட்டிங்ல ரகுவரன், நாசர், ஆனந்த்ராஜூம் நடிச்சோம். நாலுபேரும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்ல போகும்போது அவரைப் பத்தித் தான் பேசிக்கிட்டு இருந்தோம். அவரோட தீவிர விசிறி தான் ரகுவரன்.
அவரைப் பிடிக்காத ஆள் யாருமே கிடையாது. மூணு பேருமே எனக்கு சீனியர். இதுல என்னன்னா நாங்க நாலு பேருமே பிலிம் இன்ஸ்டிட்யூட்ல இருந்து வந்தவங்க தான். விஜயகாந்தை யாராவது பிடிக்கலேன்னு சொன்னாங்கன்னா அவங்க இரக்கமே இல்லாதவங்க. மனசே இல்லாதவங்க.
இதையும் படிங்க… நாடகத்தில் சிவாஜிக்கு கிடைத்த அந்த வேடம்!. ஆனாலும் ரசித்து செய்து கைத்தட்டலை வாங்கிய நடிகர் திலகம்..
அவர் ஜாதி, மதம் எதுவுமே பார்க்காம உதவி செய்றவரு தான் கேப்டன். மதுரைக்கு எப்படி மீனாட்சி கோவிலோ அது மாதிரி விஜயகாந்த். அவர் பண்ண தர்மங்களுக்கு அவரு உடல் ரீதியா இவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கக்கூடாது. அது மட்டும் தான் கொஞ்சம்… நெருடல்… அப்ப கர்மாங்கறது எங்கே போச்சுன்னு தெரில என்று சொல்கிறார் தலைவாசல் விஜய்.
[ad_2]