[ad_1]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்த்த ஓவியாவை விட பல மடங்கு போல்டான ஓவியாவாக தற்போது அவர் மாறியுள்ளார் என்பது அவரது லேட்டஸ்ட் பேட்டியை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். அந்தளவுக்கு படு போல்டாக பல விஷயங்களை வெளிப்படையாக பேசி மாஸ் காட்டுகிறார்.
சரக்கடித்து தான் 90 எம் எல் ஹீரோயின் ஓவியா ஒண்ணுமில்லாமல் போய் விட்டாரா என்கிற கேள்விக்கு, சரக்கு எல்லாம் சின்ன வயசுலயே அடிச்சு முடிச்சுட்டேன். எதுவா இருந்தாலும், அதன் எக்ஸ்ட்ரீமையே பார்த்து விடுவேன். இப்போ சரக்கு எல்லாம் எனக்கு பெரிய விஷயமில்லை. அது இல்லாமலும் எனக்கான சந்தோஷத்தை நான் அடைகிறேன் என்றார்.
இதையும் படிங்க: தோனிக்காக ஹிட் இயக்குநரை கழட்டி விட்ட ஹரிஷ் கல்யாண்!.. கல்யாணம் ஆனதும் கவினுக்கு அடித்த ஜாக்பாட்!..
நடிகை ஓவியா திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என சொல்வதால், நீங்க லெஸ்பியனா என்கிற கேள்விக்கும் கொஞ்சம் கூட கோபப்படாமல், நான் லெஸ்பியன் எல்லாம் கிடையாது. ஆனால், எந்த ஒரு ஆண் தேவையும் எனக்கு இல்லை. திருமணம் செய்து கொண்டு தான் வாழவேண்டும் என்கிற எண்ணம் எனக்கு சுத்தமாக இல்லை. திருமணம் செய்துக் கொள்ள மாட்டேன் என்று தான் நினைக்கிறேன் எனக்கூறியுள்ளார்.
அட்ஜெஸ்ட்மென்ட் விவகாரங்கள் குறித்து பேச்சுக்கள் அடிபடுகிறதே அதுபற்றி உங்கள் கருத்து என்ன என கேட்டதற்கு, அதெல்லாம் பண்ணியிருந்தா நான் ஏன் பட வாய்ப்பு இல்லாமல் இருக்கேன் என பளிச்சென சொன்ன ஓவியா அப்படியெல்லாம் பண்ணி பட வாய்ப்பு வாங்கித்தான் இருக்கணும்னு எனக்கு இல்லை. நான் அந்த மாதிரி ஆள் கிடையாது.
இதையும் படிங்க: இதை சொல்லியே ஆகணும்! நீ அவ்வளவு அழகு!.. வயசு பசங்க மனச கெடுக்கும் ஷிவானி…
அந்த மாதிரி ஹீரோயின்களும் இருக்காங்க, ஆனால், எல்லா ஹீரோயின்களும் அப்படின்னு சொல்ல வரல என சேஃப்டி கார்டும் போட்டுக் கொண்டார் ஓவியா.
ஜெயிலர் படத்தில் சிகரெட் தூக்கி ரஜினி சார் போட்டது போல நீங்க பிடிப்பீங்களா என பேட்டியில் கேட்க, சிகரெட்டை தூக்கிப் போட்டு பிடித்த ஓவியா சரியாக வராத நிலையில், நான் இப்படித்தான் பிடிப்பேன். ரஜினி சாரோட ஸ்டைல் அவர் மட்டும் தான் பண்ண முடியும் என பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
[ad_2]