[ad_1]
BiggBoss Season7: தமிழின் ஹிட் நிகழ்ச்சியாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் இன்னும் இரண்டே நாளில் தொடங்க இருக்கிறது. இதனால் வீடு எப்படி இருக்கும். போட்டியாளர்கள் யாரெல்லாம் இருப்பார்கள் என பலரும் மரண வெயிட்டிங்கில் இருந்து வருகின்றனர்.
ஒரே வீடு நூறு நாள் இந்த ஹேஸ்டேகுக்கு பலரும் அடிமை என்று தான் சொல்ல வேண்டும். கமலின் காம்பியரிங்கில் பிக்பாஸ் சீசன் முதல் மூன்று சீசன் பட்டைய கிளப்பிய நிலையில் கடந்த மூன்று சீசனாக பெரிய ஹிட்டை கொடுக்கவில்லை.
இதையும் படிங்க: முதல் அடியே மரண பயத்தை காட்டிட்டாங்க பரமா.!. ஜெயிலரின் அந்த சாதனையை காலி செய்த லியோ..!
ஏனெனில், முதல் மூணு சீசன் வெற்றியாளரை கடைசி வரை யாராலும் கெஸ் செய்யவே முடியவில்லை. ஆனால், ஆரி, ராஜூ, அசீம் என இவர்கள் தான் சீசன் வின்னர் என்பதை முதல் சில வாரங்களிலையே ரசிகர்கள் கெஸ் செய்து விட்டனர்.
இதனால் இந்த சீசனில் மிகப்பெரிய மாற்றங்களை செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதன்படி ஒரு வீடு இல்லாமல் இரண்டு வீடாக கட்டப்பட்டு இருக்கிறது. அதில் ஆண், பெண் என பிரிப்பார்களா? இல்லை பணக்கார தோரணையில் ஒன்றும் ஏழ்மையாக ஒன்றுமா என நிகழ்ச்சியின் அன்று தான் தெரியவரும்.
முக்கியமாக இந்த சீசனில் நீச்சல் குளத்தினை அமைக்கவில்லையாம். முதல் சீசனில் ஓவியா நீச்சல் குளத்தில் தற்கொலை முயற்சி செய்ததெல்லாம் வைரல் கண்டெண்ட்டானது. சில பல பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த சீசனில் அதுக்கு நோ சொல்லி இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: இதுதான் ஆரம்பம்! இனிமேதான் ஆட்டமே இருக்கு – ‘ஜெயிலர்’ வசுல் சாதனையை தவிடுபொடியாக்கிய லியோ
மேலும், வீட்டினுள் ஜெயில் வைக்கப்பட்டு இருக்கிறதாம். வீடு என்னதான் இரண்டு என்றாலும் கிச்சன் ஏரியா ஒன்று தான் எனக் கூறப்படுகிறது. இதனால் தனி வீட்டில் வசிக்கும் போட்டியாளர்களிடம் கண்டிப்பாக பிரச்னை வரும். அதுவே கண்டெண்ட்டை அதிகரிக்கும் என கிசுகிசுக்கின்றனர்.
[ad_2]