[ad_1]
எம்.ஜி.ஆர் மற்ற இயக்குனர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தாலும் அவ்வப்போது சொந்தமாக படம் தயாரித்து, இயக்கியும் இருக்கிறார். நாடோடி மன்னன் அதில் முதல் படம். தன்னிடம் இருந்த பணம் மட்டுமில்லாமல் சொத்து அனைத்தையும் அடகு வைத்து கடன் வாங்கி அப்படத்தை எடுத்தார். அப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.
அதன்பின் அவர் தயாரித்து, இயக்கி நடித்த திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபன். இப்படத்தை பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிட்ட எம்.ஜி.ஆர் இப்படத்தின் படப்பிடிப்பை ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காக் போன்ற பல நாடுகளிலும் எடுக்க திட்டமிட்டார். இப்படத்திற்கு இசை குன்னக்குடி வைத்தியநாதன் என எம்.ஜி.ஆர் முடிவு செய்தார்.
இதையும் படிங்க: நடிகைக்கு மறைமுகமாக சவால் விட்ட பத்மினி!.. பாடல் வரி மூலம் உதவிய கண்ணதாசன்!. அந்த நடிகை அவரா?!..
கண்ணதாசனை அழைத்து உலகம் சுற்றும் வாலிபன் என்கிற ஒரு படம் எடுக்கிறேன். இப்படத்தின் கதை இதுதான் என அவரிடம் விளக்கினார். இப்படத்திற்கு நீங்கள் பாடல் எழுத வேண்டும் என சொல்ல, குன்னக்குடி வைத்தியநாதன் போட்ட ஒரு மெட்டுக்கு பல்லவி மற்றும் எழுதிய கண்ணதாசன், ‘எனக்கு இன்று ஒருவேளை இருக்கிறது. நாளை வந்து சரணம் எழுதி தருகிறேன்’ என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.
அடுத்தநாள் எம்.ஜி.ஆரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட கண்ணதாசன் ‘இந்த படத்தின் கதை பல நாடுகளிலும் நடக்கிறது. நிறைய வெஸ்டர்ன் இசை தேவைப்படும். அதற்கு சரியான ஒரே ஆள் எம்.எஸ்.விஸ்வநாதன் மட்டுமே. அவனால் மட்டுமே இப்படத்திற்கு சரியான பாடலை கொடுக்க முடியும். குன்னக்குடிக்கு வேறு ஒரு படத்தில் வாய்ப்பு கொடுங்கள். இந்த படத்திற்கு எம்.எஸ்வி இசை என்றால் நான் பாடல் எழுதுகிறேன்’ என சொல்ல ‘சரி நான் யோசித்து சொல்கிறேன்’ என சொல்லிவிட்டு எம்.ஜி.ஆர் போனை வைத்துவிட்டார்.
இதையும் படிங்க: சொன்னது ஒண்ணு..செய்றது ஒண்ணு..எம்.எஸ்.வி மீது கடுப்பான கண்ணதாசன்..இப்படியா பழிவாங்குவாரு!..
அதன்பின் ஒரு மாதம் ஆகியும் எம்.ஜி.ஆர் கண்ணதாசனை தொடர்பு கொள்ளவில்லை. ஆனால், படத்திற்கான வேலைகள் நடந்து வந்தது. கண்ணதாசனும் மறந்துவிட்டார். ஒருநாள் கண்ணதாசனை அழைத்த எம்.ஜி.ஆர் ‘நீங்கள் சொல்வது சரிதான். இந்த படத்திற்கு எம்.எஸ்.வி இசைதான் பொருத்தமாக இருக்கும் என புரிந்து கொண்டேன். அவர்தான் இசை.. நீங்கள் பாடல் எழுதுங்கள்’ என சொல்ல கண்ணதாசன் அப்படத்தில் சில பாடல்களை எழுதினார். அப்படத்தில் சில பாடல்களை வாலியும் எழுதியி்ருந்தார்.
தன்னை சுற்றி இருப்பவர்கள் ஒரு விஷயம் சொன்னால் அது சரியாக இருக்கும்பட்சத்தில் எம்.ஜி.ஆர் அதை ஏற்றுக்கொள்வார் என்பதற்கு இதுவே சாட்சி. அதேபோல் குன்னக்குடிக்கு கொடுத்த வாக்குறுதியை மறக்காமல் ‘நவரத்தினம்’ என்கிற படத்தில் அவருக்கு இசையமைக்க வாய்ப்பு கொடுத்தார். இந்த தகவலை கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை ஒரு ஊடகத்தில் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: குடிகாரன் இப்படியா பாடுவான்?!.. எம்.எஸ்.வியின் வரிகளை திருத்திய கண்ணதாசன்!. அதுல அவரு கிங்கு!..
[ad_2]