[ad_1]
நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராக ரசிகர்களை மகிழ்வித்தவர் “வெண்ணிற ஆடை” மூர்த்தி. தனது இரட்டை அர்த்த வசனங்களால் ரசிக்க வைத்தோடு மட்டும் அல்லாமல் இயல்பான நகைச்சுவை மூலம் ரசிகர்களை கவர்ந்த கலைஞர் இவர். விரசம் தட்ட வைக்கும் வசனங்களாக இருந்தாலும் அவற்றை இலை,காய் மறைவாக வெளிப்படுத்துவதில் வல்லவராக இருந்தவர்.
கமல்ஹாசனுடன் “சிங்காரவேலன்”படத்தில் சில காட்சிகளில் மட்டுமே வந்திருந்தாலும் மனதில் நிற்கும் நகைச்சுவையை தந்தவர். பல படங்களில் தனது தனித்துவமான காமெடி காட்சியால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் இவர்.
வெண்ணிற ஆடை மூர்த்தி ஜாதகம் சொல்வதிலும் ஆற்றல் படைத்தவர். ஜெயலலிதா சினிமாவில் நடிக்கும்போதே அவரின் ஜாதகத்தை கணித்து ‘நீங்கள் அரசியலில் பெரிய இடத்திற்கு போவீர்கள்’ என சொன்னவர் இவர். ஜெயலலிதா அறிமுகமான வெண்ணிற ஆடை படத்தில்தான் மூர்த்தியும் அறிமுகமானார்.
இதையும் படிங்க: 20 முறை விஜயுடன் மோதிய பிரசாந்த் படங்கள்… வெற்றி பெற்றது சாக்லேட் பாயா? தளபதியா?..
இவரது பேட்டி ஒன்றில் நடிகையும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவுடனான தனது சந்திப்பு பற்றிய நினைவுகளை பகிர்ந்திருந்தார். ஜெயலலிதாவை சந்திக்க தனது குடும்பத்தாருடன் சென்றிருக்கிறார் மூர்த்தி. அங்கு பிரபலங்களின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டதாம், அப்படி இருக்கையில் எப்படியும் அவரை சந்திக்க இரண்டு மணி நேரமாவது ஆகிவிடும் என தன்னுடன் வந்தவர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் அங்கிருந்த உதவியாளர் இவரை பார்த்து வந்து ‘நீங்கள் செல்லுங்கள்’ எனச்சொல்ல ஜெயலலித்தாவை பார்க்க சென்றாராம். அப்பொழுது ஜெயலலிதா, மூர்த்தியிடம் நலம் விசாரித்து விட்டு தனது அறைக்குள்ளே சென்றவர் கை நிறைய பணத்தோடு வந்திருக்கிறார். பணத்தை அவரிடம் நீட்டி ‘எடுத்துக்கொள்ளுங்கள்’ எனச்சொல்ல மூர்த்தியோ மறுப்பு தெரிவித்தாராம்.
இதையும் படிங்க: டேனியல் பாலாஜி திருமணம் செய்து கொள்ளாததற்கு காரணம் இதுதான்!.. பயில்வான் சொன்ன ரகசியம்!..
‘எனக்கான ‘ஆரூடத்தை’ அடிக்கடி சொல்லிவரும் நீங்கள் ஏன் இதனை பெற மறுக்கிறீர்கள்?’ எனக்கேட்க ‘ஆருடம்’ சொல்வது எனது தொழில் அல்ல, அது கலை, மேலும் இதனை எனக்கு பயிற்றுவித்த எனது குருநாதரும் பணம் வாங்கக்கூடாது என அறிவுறித்தியிருந்ததை சொல்லியிருக்கிறார். ‘நான் உங்களுக்கு எப்படியாவது உதவ வேண்டும்’ என நினைத்தேன் என ஜெயலலிதா கேட்டிருக்கிறார்.
அதற்கு ‘நீங்கள் ஒரு படம் எடுங்கள். நான் அதில் நடிக்கிறேன். அதற்கு எனக்கு சம்பளம் கொடுங்கள். நடிப்புதான் எனது தொழில், ஜோதிடம் அல்ல. நான் உங்களுக்கு நணபனாகவே இருக்க ஆசைப்படுகிறேன், பண உதவியெல்லாம் வேண்டாம்’ என மூர்த்தி சொல்ல கலகப்பாக முடிவடைந்ததாம் அந்த சந்திப்பு.
எத்தனை உயரத்திற்கு சென்றாலும் சக நடிகருக்கு முக்கியத்துவம் கொடுத்த ஜெயலலிதாவின் அன்பான குணத்தை தனது பேட்டியில் வெளிப்படுத்தியிருந்தார் “வெண்னிற ஆடை”மூர்த்தி.
[ad_2]