[ad_1]
Atlee: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜவான் படத்தின் வசூல் முதல் வாரம் பட்டைய கிளப்பிய நிலையில் ஒரே வாரத்தில் வசூல் அதள பாதாளத்துக்கு சென்று இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
நயன்தாரா, யோகிபாபு, விஜய் சேதுபதி உள்ளிட்ட நட்சத்திரங்கள் ஷாருக்கானுடன் இணைந்து நடித்த திரைப்படம் தான் ஜவான். இப்படம் கடந்த 7ந் தேதி திரைக்கு வந்தது. படத்தின் வசூல் முதல் நாளே எகிறியது. தொடர்ச்சியாக நல்ல வசூல் படைத்தது. இதனால் ஜவான் வசூல் 500 கோடியை வெகு சீக்கிரமாக நெருங்கியது.
இதையும் படிங்க: 4 மணிக்கு ஆசைப்பட்டு நாசமா போச்சா!.. லியோ படத்துக்கு இப்போ எத்தனை மணி ஷோ தெரியுமா?
ஆனால் 7 நாட்களை கடந்த நிலையில் படத்தின் வசூல் ஒருநாளைக்கு வெறும் 30 கோடி மட்டுமே வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இது படக்குழுவிற்கே சற்று அதிர்ச்சியான தகவல்களாகி இருக்கிறது. ரஜினிகாந்தின் ஜெய்லர் திரைப்படம் தொடர்ச்சியாக சில வாரங்கள் திரையரங்குகளில் நின்று வசூலை குவித்தது.
ஆனால், ஜவான் திரைப்படம் 7 நாளில் வசூல் சரிந்து இருக்கிறது. இதற்கு காரணம் ஜவான் திரைப்படம் அப்பட்டமான தமிழ் படங்களின் காப்பி தான் என தொடர்ச்சியாக விமர்சனம் வந்ததே காரணமாக பார்க்கப்படுகிறது. பல டாப் நாயகர்களின் படங்களின் காட்சிகளை அப்பட்டமாக ஜவானில் அட்லீ சொருகிறார்.
இதையும் படிங்க: என் வீட்ல வந்து டான்ஸ் கேக்குதா உனக்கு!.. கடுப்பில் நாயை அவிழ்த்து விட்ட அட்லீ.. அலறிய கீர்த்தி சுரேஷ்!..
எல்லாமே காப்பி பாலிவுட்டில் யாருக்கு தெரிய போகிறுது என தொடர்ச்சியான விமர்சனம் எழுந்தது. இந்த காரணத்தால் தமிழ் ரசிகர்களின் வருகை குறைந்த நிலையில் தான் வசூல் சரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஓடிடியில் வரட்டும் என வெயிட் செய்யலாம் எனக் கிசுகிசுத்து வருகின்றனராம்.
[ad_2]