Home Cinema News ஏழு கடல் ஏழு மலை படம் இந்த கொரியன் படத்தோட காப்பியா?.. அப்படியே அந்த விஷயம் மேட்ச் ஆகுதே!.. – CineReporters

ஏழு கடல் ஏழு மலை படம் இந்த கொரியன் படத்தோட காப்பியா?.. அப்படியே அந்த விஷயம் மேட்ச் ஆகுதே!.. – CineReporters

0
ஏழு கடல் ஏழு மலை படம் இந்த கொரியன் படத்தோட காப்பியா?.. அப்படியே அந்த விஷயம் மேட்ச் ஆகுதே!.. – CineReporters

[ad_1]

இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி நடிப்பில் உருவாகி உள்ள ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு வருகிறது. கூடிய விரைவில் அந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று படத்தின் கிளிம்ப்ஸ் காட்சி வெளியான நிலையில், தற்போது அந்த படம் கொரியன் பட ரீமேக்கா? அல்லது காப்பியா? என்கிற சர்ச்சை வெடித்துள்ளது.

கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி, பேரன்பு உள்ளிட்ட படங்களை இயக்கிய ராம் தங்கமீன்கள் படத்தில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். மேலும், சவரக்கத்தி உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் உள்ளார்.

இதையும் படிங்க: அது மட்டும் நடந்தா செம ஃபயரா இருக்குமே!.. The GOAT படத்தில் யுவன் சங்கர் ராஜா செய்யப் போகும் சம்பவம்!..

மம்மூட்டியை தொடர்ந்து மலையாள நடிகரான நிவின் பாலியை ஹீரோவாக வைத்து அவர் இயக்கி உள்ள ஏழு கடல் ஏழு மலை படத்தில் நாயகன் நிவின் பாலி தனது வயது 8822 என கூறும் ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும்.

அந்த புள்ளி தான் இந்த படம் கொரியன் படத்தின் காப்பியா என்கிற சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. 940 ஆண்டு வயது கொண்ட காப்லின் கடவுள் தனக்கான மனைவியை தேடி பல ஆண்டுகள் அலைந்து திரிந்து கடைசியில் பிரஸன்ட்டில் அவரை கண்டுபிடிப்பது தான் அந்த கொரியன் படத்தின் கதை என்கின்றனர்.

இதையும் படிங்க: பிரியங்கா மோகனோட அந்த 20 நிமிஷ ஃபூட்டேஜை காணோம்!.. கதறி அழும் படக்குழு.. கடைசி நேரத்தில் என்ன ஆச்சு?

தனது நெஞ்சில் குத்தப்பட்டிருக்கும் கத்தியை எடுக்கும் சக்தி அந்த பெண்ணுக்குத்தான் இருக்கிறது என்றும் யுகம் யுகமாய் தேடி அலைவது போன்ற கதைதான் அந்த படமும் என்றும் அதே போலத்தான் ஏழு கடல் ஏழு மலை கிளிம்ப்ஸ் உள்ளது என்றும் கூறி வருகின்றனர்.

google news

[ad_2]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here