[ad_1]
Actor Ajith: கோலிவுட்டில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித். தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். தமிழ் சினிமாவை பொறுத்தவரைக்கும் ரஜினி, கமலுக்கு பிறகு பெரும் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் என்றால் அது விஜயும் அஜித்தும்தான்.
இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த ஒரே திரைப்படம் ‘ராஜாவின் பார்வையிலே’. இந்தப் படத்தில் இருவரும் நண்பர்களாக நடித்திருப்பார்கள். ஆனால் முதலில் அஜித் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான சௌந்திர பாண்டியனிடம் ‘ நான் ஹீரோவாகத்தான் நடிக்க ஆசைப்பட்டேன். இருந்தாலும் உங்களுக்காக இந்த படத்தில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்’ என்று கூறி நடிக்க வந்தாராம்.
இதையும் படிங்க: சொல்லி அடிச்ச கில்லி!. குறிப்பிட்ட மாதத்தில் வெளியான எம்.ஜி.ஆரின் 12 மெகா ஹிட் படங்கள்!..
இந்தப் படத்திற்கு முன்பாகவே அஜித்தும் சௌந்திர பாண்டியனும் நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். அதனாலேயே ராஜாவின் பார்வையிலே படத்திற்காக அஜித் சம்பளமே வாங்காமல்தான் நடித்துக் கொடுத்தாராம். ஆனால் டப்பிங் நான் தான் பேசுவேன் என்று அடம் பிடித்திருக்கிறார் அஜித்.
ஆனால் படத்தின் இயக்குனர் வேறொருவரை வைத்து டப்பிங்கை முடித்து விட்டாராம். இதனால் தயாரிப்பாளர் சௌந்திர பாண்டியன் மீது அஜித்திற்கு வருத்தம் இருந்ததாம். இதுவே அவர்களுக்குள் ஒரு சிறிய விரிசல் ஏற்பட காரணமாக அமைந்துவிட்டதாம். ஆனால் எங்கேயாவது வெளியில் பார்த்துக் கொண்டால் இருவரும் பேசிக் கொள்வார்களாம். ஆனாலும் அஜித் அதை கேட்டு என்னால் செய்யமுடியவில்லையே என்ற ஒரு வருத்தமும் எனக்கு இருக்கிறது என சௌந்திர பாண்டியன் ஒரு பேட்டியில் கூறினார்.
இதையும் படிங்க: நயன்தாரா புடவையெல்லாம் இவ்வளவு கம்மி விலையா?!.. சீரியல் நடிகை செய்த செம ஷாப்பிங் வீடியோ..
மேலும் வாலி படத்தின் போதுதான் பெஃப்சிக்கும் தயாரிப்பு கவுன்சிலுக்கும் பிரச்சினை ஏற்பட்டிருந்தது. அதனால் வாலி படத்தில் பணியாற்ற மாட்டேன் என அந்த படத்தின் கேமராமேன் ஜீவா சொல்லியிருக்கிறார்.
இதனால் அஜித் ஒரு இரவு தயாரிப்பாளர் சௌந்திர பாண்டியன் வீட்டிற்கே சென்று வாலி படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்ய வேண்டும். அதனால் ஜீவாவிடம் கொஞ்சம் சொல்லுங்கள் என்றெல்லாம் போய் பேசியதாக சௌந்திர பாண்டியன் கூறினார்.
இதையும் படிங்க: ரஜினி படத்துல வில்லனா நடிச்சும் படத்துல வரலயே!.. கார்த்திக் அப்பாவுக்கு நடந்த சோகம்!..
[ad_2]