[ad_1]
Actor MGR : தமிழ் திரையுலகில் என்றும் நம் நினைவுகளில் வாழும் நடிகர்களாக இருப்பவர்கள் நடிகர் எம்ஜிஆரும் சிவாஜி கணேசனும். இருபெரும் தூண்களாக ஒரு காலத்தில் இந்த கோலிவுட்டையே தன் வசம் வைத்திருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
நடிப்பிற்கு சிவாஜி என்றால் வீரத்திற்கு எம்ஜிஆர் என்றுதான் சொல்ல வேண்டும். எம்ஜிஆரின் படங்கள் வீர வசனத்துடன் வாள் சண்டையுடன் ரசிகர்களை எப்பவுமே உற்சாகத்தில் வைத்திருக்கும் படமாகவே இருக்கும். இன்னொரு பக்கம் குடும்பம் என்றால் என்ன? உறவுகள் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன? என தன் படத்தின் மூலம் விளக்கிக் காட்டியவர் சிவாஜி.
இதையும் படிங்க: அவர் சுயம்பு! விதை போடல இன்னும்! CM ஆவது உறுதி – அஜித்தை பற்றி இந்தளவுக்கு பேசிய பிரபலம்
அந்தளவுக்கு மாறி மாறி இருவரும் தங்கள் பங்களிப்பை இந்த சினிமாவிற்காக கொடுத்து விட்டு சென்றிருக்கின்றனர். இந்த நிலையில் எம்ஜிஆரை வைத்து ஏகப்பட்ட வெற்றிப்படங்களை கொடுத்தவர் சின்னப்பத்தேவர்.
ஆனால் சிவாஜியை வைத்து ஒரு படம் கூட பண்ணவில்லை. அது ஏன் என ஒரு சமயம் சின்னப்பத்தேவரிடமே கேட்ட போது சிவாஜியை வைத்து படம் எடுக்க சரியான சந்தர்ப்பம் அமையவில்லை என்று கூறியிருந்தாராம். ஆனால் அதில் அந்தளவுக்கு உண்மை இருக்காது என்றே நான் கருதுகிறேன் என சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜுக்கே செக் வைத்த ஹேக்கர்ஸ்… லியோ படத்தை வைத்து செய்த சதி.. என்னங்க இப்படி ஆகிப்போச்சு..!
அதுமட்டுமில்லாமல் சின்னப்பத்தேவரிடம் எம்ஜிஆர் ஒரு சத்தியம் வாங்கியதாகவும் சிவாஜியை வைத்து படமே எடுக்கக் கூடாது என்பது தான் அந்த சத்தியம் என்றும் அந்தக் காலத்தில் அரசல் புரசலாக செய்திகள் உலா வந்ததாகவும் சித்ரா லட்சுமணன் கூறினார். ஆனால் அது எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை என்றும் சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார்.
[ad_2]