[ad_1]
எந்த ஒரு கேரக்டரையும் மிகைப்படுத்தாமல் இயல்பாக நடித்து அசத்தி விடும் நடிகர்கள் ஒரு சிலரே உண்டு. அவர்களில் மறக்க முடியாதவர் நடிகர் சிவக்குமார். இவர் ஆரம்பகாலத்தில் பெரிய ஹீரோக்களுக்கு தம்பியாக, அண்ணனாக, மாப்பிள்ளையாக நடித்துக் கொண்டு இருந்தார். அப்போது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடன் நடிக்கும் வாய்ப்பு சிவகுமாருக்கு வந்தது. அது என் அண்ணன் படம். அந்தப் படத்தில் நடிப்பதற்காக சிவக்குமாரை எம்ஜிஆர் அழைத்தாராம்.
தெலுங்கு படத்தின் ரீமேக் தான் என் அண்ணன். தெலுங்கில் சோபன் பாபுவின் அண்ணன் வேடத்தில் நடித்த பாத்திரத்தில் தமிழில் சிவக்குமாரை நடிக்க வைக்க தேர்ந்தெடுத்தார்களாம். படத்தில் அவருக்காக ஒரு பாடல் காட்சியும் இருந்தது. அந்த அருமையான வாய்ப்பை யாராவது மிஸ் பண்ணுவார்களா? அப்போது சிவக்குமார் ஏவிஎம் தயாரிப்பில் சிவாஜி உடன் உயர்ந்த மனிதன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
அவரை புக் செய்யும்போதே வேறு எந்தப் படத்திலும் நடிக்கக்கூடாது என்று சொல்லித்தான் ஒப்பந்தம் செய்தார்களாம். விஷயத்தை ஏவிஎம்மிடம் சொல்லி விட, அவர்கள் மறுத்துவிட்டு, எம்ஜிஆருக்கும் எந்த இடைஞ்சலும் வராதவாறு பார்த்துக்கொண்டார்களாம். சிவகுமாருக்கு அந்த வாய்ப்பு மிஸ் ஆனது. பிறகு அந்த வேடத்தில் சிவக்குமாருக்கு பதில் முத்துராமன் நடித்தார்.
சிவக்குமார் எம்ஜிஆருடன் காவல்காரன், இதய வீணை, தெய்வ தாய் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல சிவாஜியுடன் சரஸ்வதி சபதம், எதிரொலி, பாரதவிலாஸ், கந்தன் கருணை, திருமால் பெருமை, உயர்ந்த மனிதன் ஆகிய படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.
நடிகர் சிவக்குமாரைப் பொருத்தவரை எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர், ரஜினி, கமல், பிரபு, கார்த்திக், சரத்குமார், சத்யராஜ், டி.ராஜேந்தர், விக்ரம், அஜீத் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் சூப்பர்ஹிட் தான். இவர் வெறும் நடிகர் மட்டுமல்லாமல் சிறந்த பேச்சாளர் என்பதம் சிறந்த ஓவியர் என்பதும் பலரும் அறியாத விஷயம்.
[ad_2]